தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று (ஜூலை 18) பொறுப்பேற்றார். அண்மையில் இதற்கான தேர்தலில் வெற்றிப்பெற்ற தமிழ்மகன் உசேன் - பொறுப்பேற்கும் நிகழ்ச்சி வக்ப் வாரிய தலைமையகத்தில் நடைபெற்றது.
அப்போது - சமூக நலத்துறை அமைச்சர் திருமதி பா.வளர்மதி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு கே.டி. பச்சம்மல், பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) தலைவர் திரு ஜே.சி.டி. பிரபாகர், சட்டமன்ற உறுப்பினர் திரு முஹம்மத் ஜான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.
|