பொது மக்கள் கொடுக்கும் புகார் மீதி வழக்கு பதிவு செய்ய மறுத்தால் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் போலீசார் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிப்பு, மார்ச் மாதம் 5 வயது சிறுமி கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் அலைக்கழித்தனர். இவைகளை தவிர வேறு பல தருணங்களிலும் போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பதாக மனித உரிமைகள் அமைப்புகளும் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தியது. அப்போது - ஒரு ஆணோ, பெண்ணோ பாதிக்கப்பட்டது யாராக இருந்தாலும், அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அது தான் தகவலை பெற்றுக்கொண்டதற்கான ஆதாரம் ஆகும் என்று சட்டம் சொல்கிறது எனவே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு உத்தரவு அனுப்பியுள்ளது. அதில் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீது போலீசார் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு FIR போட மறுத்தால் அது ஒரு ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் (இந்திய தண்டனைச் சட்ட தொகுப்பு - INDIAN PENAL CODE, விதி 166-A : அரசு அதிகாரி தன் கடமையை செய்ய மறுப்பது) என தெரிவித்துள்ளது.
இதே போல் குற்றம் நடந்தது வேறு இடமாக இருந்தாலும் அது தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி அல்ல என்று போலீசார் புகாரை பெற மறுக்க கூடாது. புகார் மீது ஜீரோ FIR பதிவு செய்து அதை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
FIR போடுவதில் தாமதம் ஏற்பட்டால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் அவதி ஏற்படுத்துவதுடன் குற்றவாளிகள் தப்பிக்கவும் வாய்ப்பாக அமைந்து விடும். மாநில அரசுகள் இதை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
2. விரைவில் இறைவனின் உண்மையான தீர்ப்பும் அதன் தண்டனையும் அநியாயகாரர்களுக்கு கிடைப்பது உறுதி... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[18 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28738
உத்தரவுகள் பல வரலாம் ஆனால் அது நடைமுறைக்கு செயல்படுவது கிடையாது என்பதே வேதனையான விசியம்...
பண பலம் உள்ள எவனும் தனக்கு பிடிக்காதவனை இன்னருவன் மூலம் பொய் கேஸ் போட வைத்து பழிவாங்குவது சகஜமாகி வருகிறது...
அதே நேரத்தில் உண்மைலேயே ஒருவன் பாதிக்கப்பட்டு நியாயம் வேண்டி காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க சென்றால் அவனுக்கு முறையாக FIR போட்டு ரசீது கொடுப்பது கிடையாது... இது நமது நகரில் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் சம்பவமாக உள்ளது..
பொது மக்கள் கொடுக்கும் புகார் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்தால் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில்: மத்திய அரசு புதிய உத்தரவு! இது செயல் படாது... !
ஆகையால் பண பலத்தாலும் இன்னும் பல அரசியல் பலத்தாலும் காவல்துறை மூலம் அலைகழித்து பாதிக்கப்பட்ட மனிதன் வேறு வழியின்றி வல்ல இறைவனிடம் முறையிட்டு ஆதிக்க வர்க்கத்திற்கு அழிவை கொடு என்று துவா செய்கின்றான்...பின்னர் சபிச்சு சாபமும் விடுகிறான்... இதுவே தற்போது நமது நகரில் நடந்து வருகிறது...
நகரில் சில பேர் இந்த மாதிரியான பண ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி தினமும் காவல் நிலையம் - கோர்ட் என்று அலைந்து வருவது குறிப்பிடத்தக்கது... விரைவில் இறைவனின் உண்மையான தீர்ப்பும் அதன் தண்டனையும் அநியாயகாரர்களுக்கு கிடைப்பது உறுதி...
இந்த மாதிரி கருத்து பதிபவன் எவனோ அவனும் கண்காணிக்க படுகிறான் பண பலம் படைத்த ஆதிக்க வர்க்கத்தின் அடியாட்கள் மூலமாக என்பது குறிப்பிடதக்கது...
3. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[18 July 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28740
அருமையான உத்தரவு. இதுமாதிரி பல பல உத்தரவுகள் வந்து விட்டன..!! ஆனால் நடைமுறையில் வந்தவைகள் எத்தனை. யார் காவல்துறைக்கு எதிராக புகார் கொடுப்பார்கள்.?
முதலில் காவல் துறை என்றால் ஒரு பயம் வருகின்றதே அந்த பயத்தை நீக்க வேண்டும். காவல்துறை நம் நண்பன் என்று எழுதிப் போட்டு உள்ளதை உண்மை படுத்த வேண்டும்.
ஒரு டெலிபோன் உரையாடல்.
- ஹலோ, ................... உடைய வீடா இது?
- ஆமாங்க.. .................. நீங்க யாருங்க.?
- நான் .................... போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுகின்றேன், நீங்க ...................க்கு யாரும்மா?
- சார். சார்... நான் அவனுடைய உம்மாதான் சார். அவன் நல்லவன் சார், எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான் சார். அவனுக்கு வெளி நண்பர்களே இல்லை சார். வீட்டிலே தான் சார் இருப்பான். சென்ற வாரம் நடந்த தகராறுக்கும் இவனுக்கும் சம்பந்தமே இல்லை சார்.. அவன்..
- எம்மா.. இரும்மா.. இரும்மா.. அவன் பாஸ்போர்ட் விண்ணப்பித்து இருக்கின்றான், அதை விசாரிக்க தான் போன் பண்ணினேன், நீங்க என்னம்மா புது கதையா உளறுகின்றீங்க..!
இப்படித்தான் போலீஸ் என்றாலே மக்கள் பயத்தில் நடுங்கு கிறார்கள். இதை முதலில் சரி செய்தாலே நல்ல மாற்றமாக இருக்கும்.
4. Re:...பாஸ்போர்ட் க்கு வந்த போன் குறித்து posted byISMAIL HYDER (kayalpatnam)[20 July 2013] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 28805
அன்பர்களே, நமதூரில் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போதெல்லாம் கைமடக்காக 300 ரூபயை வசூளிக்கிரர்கலே அதை தடுத்து நிறுத்த முடியாதா?
ப்ரோசெஸ் ஆகலேன்னு சொல்வார்கள் ...நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் எல்லாம் ஓகே ஆகிரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross