காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் அமைந்துள்ளது ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி.
இப்பள்ளியின் தரை பரப்பு மொஸைக் கல் பதிக்கப்பட்டதாக இருந்தது. நாளடைவில், அவை நீர்க்கசிவு கண்டதையும், மின் கம்பிவடங்கள் (வயரிங்) இற்றுப்போனதையும் கருத்திற்கொண்டு, அவற்றைப் புதுப்பிக்க பள்ளி நிர்வாகம் தீர்மானித்தது.
அதனடிப்படையில், கடந்தாண்டு ஹஜ் பெருநாளையடுத்து, சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் பள்ளியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. உட்பள்ளி மற்றும் நடுப்பள்ளியின் தரைகளிலுள்ள மொஸைக் கற்கள் அகற்றப்பட்டு, வழுவழுப்பான டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
அமர்ந்த நிலையில் உளூ செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஹவுள் அகற்றப்பட்டு, தற்போது நின்று உளூ செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள பழைய மின் கம்பிவடங்கள் (வயரிங்) அகற்றப்பட்டு, புதிதாக வயரிங் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |