அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளையின் சார்பில், புதிய பருவத்திற்கான நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, இம்மாதம் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெறுகிறது.
காயல்பட்டினம் நகர அரிமா சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள ஏ.கே.பீர் முஹம்மத் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் டி.சுயம்புராஜன், மண்டல தலைவர் சான்டியகோ தர்மர் டி ரோஸ், பிராந்திய தலைவர் டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுறும்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் அரிமா சங்க நடப்பு தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், செயலாளர்களான வி.டி.என்.அன்ஸாரீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, பொருளாளர் கே.அப்துர்ரஹ்மான் மற்றும் அங்கத்தினர் செய்து வருகின்றனர். |