காயல்பட்டினம் நெய்னார் தெரு மற்றும் பெரிய தெரு (வள்ளல் சீதக்காதி திடல்) ஆகிய பகுதிகள் வழியே இன்று மாலை சுமார் 06.20 மணியளவில் சென்ற வான்கோழி ஊர்வலக் காட்சிகள்தான் இவை.
உயிருடன் கிலோ ரூபாய் 180க்கு விற்பனை செய்யப்படுகிறது. நோன்புப் பெருநாள் நெருங்கிவிட்டால், விலை கட்டுக்கடங்காமல் சென்றுவிடும் என்று அச்சப்படும் பலர், ஊர்வலத்தை நிறுத்தி, தமக்குப் பிடித்த ‘வீரர்’களைக் கொள்முதல் செய்து செல்கின்றனர்.
[செய்தியில் கூடுதல் தகவலும், ஒரு படமும் இணைக்கப்பட்டது @ 03:07 / 19.07.2013]
1. Re:... posted byP.S ABDUL KADER (KAYALPATNAM)[19 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28757
கிலோ ரூ150 வீதம் 3 கிலோ எடை மதிக்க ஒரு வான்கோழி ரூ450 என்று 2 வான்கோழி ரூ900க்கு தந்தார். அடிக்கிற வெயிலில் பெருநாள் வரை பிழைக்குமா என்று சந்தேகம். 2 வான்கோழியை அறுத்தால் 3 கிலோ இறட்சிதான் தேரும்.
சாரோ ....நோன்பு பெருநாளை முன்னிட்டு ...இந்த வான் கோழி ரேட்டு ஏறிவிடும் என்று எண்ணி .நம் மக்கள் இப்பவே இந்த கூடுதலான ரேட்டுக்கு ஏன் சார் வாங்க வேணும்..... இதை இந்த வியாபாரி கண்ணுற்று கவனித்து கண்டிப்பாகவே மேலும் ...மேலும் ...தாறுமாறான முறையில் விலையை சொல்லுவது நிச்சயம் ....
நம் ஊரின் ஒற்றுமையை நாம் இந்த வான் கோழி வாங்குவது மூலம் அறிந்து கொள்ளலாம் .....நடுத்தர & ஏழை மக்களின் நிலைமைதான் நாம் எண்ணி பார்க்கவே நமக்கே பயமாக இருக்கிறது ............
நோன்பு பெருநாள் வரும் முன் ..பொது மக்களின் நலன் கருதி ........இது போன்று சின்ன ..சின்ன ....விலை ஏற்றம் வர கூடிய பிரச்சனையை நமது ஊர் பொது நல அமைப்புக்கள் இப்போவே கண்ணுற்று கவனித்து ..கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தால் தான் நல்லது ..... வஸ்ஸலாம்
3. Re:... posted byV D SADAK THAMBY (Hong Kong)[19 July 2013] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 28767
ஷேர் மார்க்கெட்டில் விலை ஏறுகிறமாதிரி வான்கோழி விலையும் பெருநாள் வருவதற்குள் எகிறிவிடும் . இப்போது 180 , பிறகு 300 ஆனாலும் ஆகிவிடும். கணக்கு பார்க்காமல் இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். யார் யார் எல்லாமோ நம் ஊரை வைத்து பிழைக்கிறார்கள் . போனால் போகட்டும். வான்கோழிகாரன் பிழைத்துவிட்டு போகிறான்.
5. பிராய்லர் வான்கோழிகள்... posted byM.N.L.Mohamed Rafeeq, (Kayalpatnam)[19 July 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 28788
ஓய்...சாளை அது என்ன 15 விசில், கிழட்டுக் கோழி...? பாவம் வான்கோழிகள் கோபித்துக் கொள்ளப்போகிறது. இதை தனி நபர் விமர்சனம் என்று கத்திரி போட மறந்துட்டாங்களோ...?
சரி உமக்கு ஒரு சங்கதி தெரியுமா...? இன்னைக்கு அஸர்லெ நம்ம P.S.ஐ பார்த்தேன் மனுஷன் ரெம்ப சோகமா இருந்தார்.ஏன்னப்பா...நோன்பு பிடிச்ச களைப்பா? என கேட்டேன். அது ஒன்னுமில்லெ நேத்து வாங்கின வான்கோழிலெ ஒன்னு மய்யத்தாயிட்டுன்னு சொன்னார். மச்சான் மிஞ்சின ஒன்னை இன்னைக்கே கத்தி வச்சிடு இல்லாட்டி அதுவும் மய்யத்தாயிடும்ன்னு சொல்லிட்டு வந்தேன். இன்னைக்கு அவர் வீட்டுலெ அநேகமாக வான்கோழி கறியாகத்தான் இருக்கும்.
இது பண்ணைக்கோழிகள் ரூ450 வாங்கி 900 ரூபாய்க்கு தீனி போடனுமாம். சேர்ந்தின் நின்றா ஒன்னுமாகாதாம். தனியா வளர்த்தா தங்காதாம். கறியும் சீகிக்கிரம் வெந்து நார் நாராக சுவை குன்றி இருக்குமாம். சரி...! பிராய்லர் கோழி கிலோ 160 இருக்கும் போது பிராய்லர் வான் கோழி 150க்கு கிடைக்குதே அது சந்தோஷம்.
-ராபியா மணாளன்.
6. வான்கோழி வசனம் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[20 July 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28798
ஒரு வான்கோழி மற்றொன்றைப்பார்த்து ,உனக்கு விஷயம் திரியுமா ,நம்ம கூட்டத்தை காயல்வெப்பிலே
காட்டிட்டாங்களாம். இனி நாம் எந்த வீட்டுக்கும் சீக்கிரம் போக முடியாது. ஏன்னா நாம பொறந்த இடம் வளர்ந்த விதம் எல்லா சரித்திரத்தையும் கமெண்ட் என்ற பெயரில் அக்கு வேற ஆணி வேற புட்டு புட்டு வச்சிட்டாங்களாம்! இனி எத்தனை தெருவுக்கு ஊர்வலமாக போகப்போகிரோமோ? ரெம்ப டயர்டாகிறது
காயல் வெப்பே இது உங்களுக்கு அடுக்குமா?
அநியாயம் இல்லையா?
அதில் ஒரு கோழி, அட நீங்க ஒன்னு, எந்த வெப்பிலே போட்டாதான் என்ன, இப்ப ஒரு தெரு வரும் பாரு, அந்த தெருக்காரனுவோ நம்மை அப்படியே அள்ளிக்கிட்டு கொண்டுபோய் அழகு பார்க்கிறாங்களா இல்லையா என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும்!
வான்கோழி வசனம் கேட்ட வான்கோழி,
முஹம்மது ஆதம் சுல்தான்
8. ஓ............... கொழு...கொழு...கொழு. posted bys.s.md meerasahib (TVM)[20 July 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 28812
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே...... ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு... ...
ஓ...... என்று நம் பிள்ளைகள் சப்த்தம் போட்டு பார்த்தார்களாம். ஆனால் சில வான்கோழிகள் மட்டும்தான் கொழு...கொழு...கொழு. என்று சப்த்தம் போட்டதாம். சில வான்கோழி மாதிரி இருந்தவை மயிலை மாதிரி அகவிச்சாம்.....!!! ஒரு வேலை ஹேர் கட்டிங் & டய்யா இருக்குமோ.....?
அட...... வாப்பாமார்களா...... சும்மா....... ஒரு காமடிக்கு சொன்னேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross