கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றம் (MKWA) சார்பில், 28.07.2013 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்துவதென செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 57ஆவது செயற்குழுக் கூட்டம் 14.07.2013 அன்று காலை 10.30 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில், மன்றத்தின் துணைத் தலைவர் யு.எல்.செய்யித் அஹ்மத் தலைமையிலும், செயலாளர் உதுமான் லிம்ரா முன்னிலையிலும் நடைபெற்றது.
வரவேற்புரை:
துவக்கமாக மன்றச் செயலாளர் உதுமான் லிம்ரா அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து, அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்தார். அத்துடன் மருத்துவ உதவிகளை ஒரு குடையின் கீழ் நிகழ்த்த தீர்மானிக்கும் SHIFA – ஷிஃபா அமைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மற்றும் அதன் துவக்கம் குறித்தும் கூட்டத்தில் விளக்கமாக எடுத்துரைத்தார்.
தலைவர் உரை:
பின்னர், மன்றத்தின் துணை தலைவரும் - கூட்டத் தலைவருமான யு.எல்.செய்யித் அஹ்மத் தலைமையுரையாற்றினார். அமைப்பின் தலைவர் மஸ்ஊத் அவர்கள் ஊர் சென்றுள்ளதால், இக்கூட்டத்தை நடத்திட தன்னை பணித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் மருத்துவ உதவி கோரி மன்றத்திற்கு வந்திருக்கும் மனுக்கள் அனைத்தையும் விரிவாக வாசித்து உறுப்பினர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிகொண்டார்.
எதிர்வரும் 28.07.2013 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதற்காக உணவு ஏற்பாட்டுக் குழு அமைப்பது மற்றும் நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது என அனைத்து அம்சங்கள் குறித்தும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்தார்.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - இஃப்தார் நிகழ்ச்சி:
எதிர்வரும் 28.07.2013 அன்று, மன்றத்தின் சார்பில் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியை கோழிக்கோடு புதியரா ஸ்டேடியம் சாலையில் அமைந்துள்ள கே.எம்.ஏ. ஹாலில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 02 - மருத்துவ உதவி:
நோயாளி ஒருவருக்கு மருத்துவ செலவினங்களுக்காக மன்றத்தின் சார்பில் ரூ.50,000 மருத்துவ உதவியாக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 03 - மாணவ மாணவியரை கவுரவித்தல்:
நடந்து முடிந்த SSLC மற்றும் +2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற - மன்ற உறுப்பினர்களின் மக்களுக்கு, வரவிருக்கும் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் நேரில் அழைத்து கவுரவிக்க தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நன்றியுரைக்குப் பின், அனைவரின் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
காலை 10.30 மணிக்குத் துவங்கிய கூட்டம் 12.15 மணிக்கு லுஹர் ஜமாத்துக்கு இடை நிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் மதியம் 1.10 மணிக்கு துவங்கிய கூட்டம் மதியம் 02.15 மணிக்கு நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்யது ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம்,
கோழிக்கோடு |