காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள குடிநீர் வினியோகக் குழாய் திறப்புத் தொட்டியில், நேற்று (ஜூலை 20) திறப்புக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் 03.00 மணியளவில் அங்கு சென்று பார்த்தபோது, வான வேடிக்கைக் காட்சி போல் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது.
இதுகுறித்து தகவல் தெரிவிப்பதற்காக, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநரின் கைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது, அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தண்ணீர் திறக்கும் பொறுப்பிலிருந்த அலுவலரிடம் கைபேசி வழியே தகவல் தெரிவிக்க, அவர் உடனடியாக வந்து பார்ப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் உடைப்பு சரிசெய்யப்படவில்லை.
கள உதவி:
A.K.இம்ரான் |