காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கை பதவி நீக்கம் செய்ய நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன் மற்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர் - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் டி.மோகனிடம் மனு வழங்கியுள்ளனர். ஜூலை 11 தேதியிட்ட அம்மனுவில் அவ்விருவர் உட்பட நகர்மன்றத்தின் 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 08ஆம் தேதி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த 11 குற்றச்சாட்டுகளுடன், தற்போது புதிதாக ஒரு குற்றச்சாட்டு இணைக்கப்பட்டு, மொத்தம் 12 குற்றச்சாட்டுக்கள் - சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு - ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யும் முன் - அவர்கள் சார்பாக துணைத் தலைவர் கூறிய சம்பவமாகும்.
மார்ச் மாதம் உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் - தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர், மார்ச் 21 தேதியிட்ட நோட்டீஸ் மூலம் ஏப்ரல் 05, 2013 அன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் பிரிவு 40A, 2011ஆம் ஆண்டே தமிழக அரசால் திருத்தப்பட்டுவிட்டது. அதன்படி - மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படும் நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இயலாது. ஆகவே நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனரின் கூட்ட அழைப்பிற்கு ஏப்ரல் 03, 2013 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தடை விதித்தது.
இந்நிலையில், நகர்மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 40B “[தலைவரை நீக்கம் செய்வது; REMOVAL OF CHAIRMAN]” மூலம் உறுப்பினர்கள் தங்கள் மனுவை தற்போது சமர்ப்பித்துள்ளனர்.
3. எங்கள் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்டு மார்தட்டிக்கொள்வது எந்த மஹாராசனை திருப்தி படுத்த...? posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[23 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28842
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது. வழக்கமான உப்பு சாப்பில்லாத காரணங்கள். வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய வாக்கு வித்தியாசங்களில் வெற்றி பெற்ற புன்னியவான்களே...உங்களுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களாகிய எங்களுக்கு எவ்வளவு இருக்கும்...?
9932 வாக்குகள் பெற்று நான்காயிரத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடிய மக்கள் பிரதிநிதியான சேர்மனை அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட முடியாது.
சொத்தே அழிந்தாலும் பரவாயில்லை சேர்மனை தூக்கி எறிந்து விட்டுதான் அடங்குவேன் என அடம் பிடிக்கும் மண்டூகங்களே... ஒரு முறை மூக்குடைபட்டது போதாது என்று மீண்டும் மூக்கை கூர்தீட்டிக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். அதிகாரவர்கம், ஆணவப்போக்கு, பண பலம் இவை அனைத்தையும் மாபெரும் மக்கள் சக்தி முறியடிக்கும். இன்ஷா அல்லாஹ்! பொறுத்திருந்து பாருங்கள்.
மேற்கூறிய 16 உறுப்பினர்களும் இனி வாழ்நாளில் நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்பது உறுதி! உங்களுக்கு ஓட்டுப்போட்டு நாங்கள் உங்களை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தது, இப்படி வெளிநடப்பு செய்வதற்கோ, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கோ, பார்வையாளர்கள் மீது பாய்ந்து பொய்வழக்கு போடுவதற்கோ, வாடி போடி என ஒருமையில் பேசுவதற்கோ, வகுந்துடுவேன், செருப்பாலெ அடிப்பேன், வழித்துக்காட்டுவா (நவூதுபில்லாஹ்) நாக்கை இழுத்து வைத்து ஒட்ட அறுத்துடுவேன் என வீர வசனம் அதுவும் ஒரு சாதாரண பெண்மணியான தலைவியைப் பார்த்து சூளுரைப்பதற்கோ அல்ல!
மக்கள் நலம் ஊர் வளர்ச்சி என உபயோகமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையில்தானே...? அதில் மண்ணை அள்ளிப்போட்டு மார்தட்டிக்கொள்வது எந்த மஹாராசனை திருப்தி படுத்த என்பதை சற்ரேனும் எண்ணிப்பாருங்கள்.
உங்களை தேர்ந்த்டுத்த பாவத்திற்காக எங்கள் தலையில் நாங்களே அடித்துக் கொள்கின்றோம்.
4. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[23 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28843
பலமுறை குற்றம் சுமத்தினாலும் - தீர்ப்பு ஒருமுறைதான்.
முன்பே வந்துவிட்டது. யாரிடம் சென்று பதவி நீக்கம் மனு கொடுத்தாலும், எங்கு வழக்கு வாதித்தாலும் ஒன்றும் நடந்தேரபோவது இல்லை.
இந்த தீர்ப்பின் முடிவை பார்த்தபின் முன்பை போலவே மற்றொரு உறுப்பினர் தானாக தனது உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்வார்.
5. நாம் கேட்ட துவாவின் பயனை இப் புண்ணிய காயல் காணத்தான் போகிறது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[23 July 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28844
"புண்ணியங்கள் பூத்துக்குலுங்கும் புனித ரமலான்" என்ற தலைப்பில் புனிதமிகு ரமலானை வரவேற்று கவிதை எழுதி இபாததுக்களில் இம் மாதத்தை எதிர்கொண்டிருக்கும் எனக்கும் ஏனைய நமதூர் மக்களுக்கும்,இந்த செய்தி வேதனை கலந்த ஒரு வகை வெறி உணர்வைத்தான் ஊட்டுகிறது!!
அன்பு நடுநிலை வாதிகளே பொறுமையை கைகொண்டு படைத்தவனிடமே பொறுப்பை விட்டுவிடுங்கள்!இப் புனித மாதத்தில் அவன் அழகிய தீர்ப்பை அளித்திடுவான்!
நீதியும்,நேர்மையும்,நடுநிலையும் ஒரு இரும்பு பெட்டியாலோ அல்லது ,இரும்பு சக்தியாலோ இழுத்தடிக்கப்பட்டு ஏளனத்திக்குறியதாக்கி விடலாம் என்று கனவு காணும் சதிகாரர்களின் சாணக்கிய திட்டத்தை.
இத் தரணியிலுள்ள அனைவரையும் காத்து காவல் புரியும் அல்லாஹ் அணு அணுவாக பார்த்துக்கொண்டிருக்கிறான்!
இப்புனித மாதத்தில் அக்ரமக்காரர்களின் ஆணிவேரை அடியோடு பிடுங்கி எரிந்து விடுவான்!
பொருமையைக்காப்போம் இப் புனிதமாதத்தில்,பேரிறைவனின் நீதியை நிலைநாட்ட அவன் நெருக்கும் தண்டனையை நடுநிலையானவர்களும் ,நாளும் தீமையால் தாங்க முடியா வேதனையில் துவண்டவர்களும் கண்குளிர காணத்தான் போகிறார்கள்!
நாம் கேட்ட துவாவின் பயனை இப் புண்ணிய காயல் காணத்தான் போகிறது!
6. Re:... posted byVilack SMA (Zibo , Shandong , China)[23 July 2013] IP: 222.*.*.* China | Comment Reference Number: 28845
[ 9932 வாக்குகள் பெற்று நான்காயிரத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடிய மக்கள் பிரதிநிதியான சேர்மனை அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட முடியாது. ]
ஒன்பதாயிரம் வாக்குகள் பெற்றார் என்பதற்காக இவரை ஓகோவென்று சொல்லிவிடமுடியாது . அன்று மக்கள் இவரைப்பற்றி அறியாமல் இவருக்கு ஆதரவளித்தனர் . தேர்தல் நேரத்தில் இவர் கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றினாரா ? நகரமன்ற கூட்டங்களில் நிறைவேறிய தீர்மானங்கள் ஏதாவது நடைமுறைபடுத்தபட்டுள்ளதா ? இல்லை . பின் எதற்கு திரும்ப திரும்ப ஒன்பதாயிரம் என்று ஒப்பாரி வைக்கின்றனர் என்று தெரியவில்லை .
[ இப்படி வெளிநடப்பு செய்வதற்கோ, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கோ, பார்வையாளர்கள் மீது பாய்ந்து பொய்வழக்கு போடுவதற்கோ, வாடி போடி என ஒருமையில் பேசுவதற்கோ, வகுந்துடுவேன், செருப்பாலெ அடிப்பேன், வழித்துக்காட்டுவா (நவூதுபில்லாஹ்) நாக்கை இழுத்து வைத்து ஒட்ட அறுத்துடுவேன் என வீர வசனம் அதுவும் ஒரு சாதாரண பெண்மணியான தலைவியைப் பார்த்து சூளுரைப்பதற்கோ அல்ல! ]
நோன்பு நேரம் . பொய்யுரைப்பவர்கள் மீது அல்லாஹ் தனது ஆற்றலை காட்டுவானாக . மூன்று நகரமன்ற கூட்டங்களில் பார்வையாளராக இருந்தேன் . நீங்கள் குறிப்பிட்ட அந்த 16 பேரும்
ஏதாவது ஒரு வகையில் குறை உள்ளவர்கள்தான் . ஆனால் மீதி உள்ள அந்த 2 பேரும் சுத்த சூபிகளா ? முதலில் ஒருமையில் பேசியது யார் என்றும் யாரால் பிரச்சினைகள் ஆரம்பித்தது என்று எனக்கும் தெரியும்
[ மேற்கூறிய 16 உறுப்பினர்களும் இனி வாழ்நாளில் நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்பது உறுதி! ]
இவ்வளவு உறுதியாக கூறிய இவர் மற்ற இரண்டு பேரும் தேர்தலில் நின்று மக்களிடம் முகத்தைகூட காட்ட தகுதியானவர்களா என்பதையும் கூறியிருக்க வேண்டும் . ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள் அந்த அளவுக்கு இருக்கிறது.
[ உங்களை தேர்ந்த்டுத்த பாவத்திற்காக எங்கள் தலையில் நாங்களே அடித்துக் கொள்கின்றோம். ]
நீங்கள் மட்டுமல்ல இந்த தலைவியை தேர்ந்தெடுத்த பாவத்திற்காக , இவரது ஆதரவாளர்கள் அனைவருமே இப்போது தலையில் அடித்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை .
9. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் ( அல்கோபார் )[23 July 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28850
மீண்டும் ஒரு படையெடுப்பா...! எடுக்கட்டும் எடுக்கட்டும். இது இவர்களின் உரிமை. தவறு இல்லை. எது நன்மை என்று வல்ல அல்லாஹ் நாடியுள்ளானோ அது நடக்கட்டும்.
*நம் நகராட்சியில் பணிகள் சரியாக நடக்கவில்லை, தலைவி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அனைத்தும் சரிதான்.
- எங்கு செய்ய விட்டீர்கள். என்ன ஒத்துழைப்பு கொடுத்தீர்கள். உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுத்தார்களா? அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்தார்களா?
பணி செய்யவும் மாட்டீர்கள், செய்யவும் விடமாட்டீர்கள், குடைச்சலும் கொடுப்பீர்கள். அப்புறம் வக்கனையா கேள்வி மட்டும் வரும்.
இருக்கின்றவன் ஒழுங்கா இருந்தால்தான், சிரைக்கின்றவன் ஒழுங்காக சிரைப்பான். முடிவெட்ட உட்கார்ந்து விட்டு, தலையை ஆட்டிக்கிட்டும், உருண்டுக்கிட்டும் இருந்து விட்டு, ஒழுங்கா முடி வெட்ட தெரியவில்லை, அங்கு கத்தி பட்டுவிட்டது, இங்கு சிராய்ப்பு வந்து விட்டது என்று புலம்பிய மாதிரி உள்ளது.
வல்ல ரஹ்மானுக்கு நன்கு தெரியம், யாருக்கு பதவியை கொடுக்கனும், யாருடைய பதவியை பிடுங்கனும் என்று. நம் கடமை இறைவனிடம் இறைஞ்சுவதுதான். இன்ஷா அல்லாஹ் நன்மையாக அமையட்டும்.
10. Re:...வாழு அல்லது வாழ விடு posted bysulaiman (SAUDI ARABIA)[23 July 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28851
இது தேவை இல்லாத அவசியமற்ற ஒரு மட்டரக மான செயல் .
ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்து எடுக்க பெற்ற ஒரு நகரமன்ற தலைவரை , இவர்களின் தனிப்பட்ட வேண்டா வெறுப்பிற்காக தேவை இல்லாமல் இந்த நகரமன்ற உருபினர்கள் மனு கொடுத்து இருபது என்னை போன்ற நடு நிலை வாதிகளால் ஒத்து கொள்ள இயலாது . அவரை தேர்ந்து எடுத்த மக்களுக்கு தான் அதை முடிவு செய்ய உரிமை உள்ளதே தவிர , நகரமன்ற உறுப்பினர்கள் அதை முடிவு செய்ய யார் உரிமை தந்தார்கள் ?
அல்லது உங்களை இதை செய்ய யார் தூண்டி விடுகிறார்கள் ?
தேர்ந்து எடுக்க பட்ட உங்கள் வார்டு மக்களுக்கு நகரமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நீங்கள் என்ன தான் செய்து கிழித்து விட்டீர்கள்? நீங்கள் செய்யும் இந்த செயல் சரிதானா என்று உங்கள் மனசாட்சியை தொட்டு முதலில் நீங்கள் கேலுங்கள். மனசாட்சி உள்ளவர்களாக இருந்தால் .....
12. ரமலான் ஸ்பெஷல் posted byS.A.Muhammad Ali (Velli) (Dubai)[23 July 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28854
கோக்கு மாக்கா யோசிக்கிறதே இவங்க பொலப்பா போச்சி.
ஆரம்பத்துல எனக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருந்திச்சி. இப்போ அதுவே பலகிடிச்சி. இவங்களும் மாங்கு மாங்குன்னு எவ்ளோ தான் முயற்சி பண்றாங்க. ஆனாலும் அந்த பொம்பளையை அசைசசி கூட பார்க்க முடியல.
தொடர் தோல்வியில் இருந்து மீண்டும் ஒரு ஹிட்டாவது கொடுக்கலாம் என்ற கட்டாயத்தில் அதீதமான உழைப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். கடைசியில் அவங்க அவங்க சீட்ட காப்பாத்துறதுக்கே முடியாம துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட போகிறார்கள். ரமலான் என்பதால் கொஞ்சம் கவனிப்பு அதிகமாக தான் இருக்கும்.
13. Re:...ஐயோ ஐயோ பாவம் கடைத் தேங்காய் posted byseyed Ibrahim (yanbu,saudi arabiya)[23 July 2013] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28855
ஓட்டுகள் போட மட்டுமே , அதன் பின் அனைத்து அதன் சட்டத் திட்டங்ககளுக்கு உட்பட்டது. இங்கு விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன .விமர்சனங்கள் விமர்சிப்பதற்கு மட்டுமே தவிர சண்டை இடுவதற்கு இல்லை ."இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவகுத்தலும் வல்லது அரசு." ஒருவர் மற்றொருவர் மீது புகார்கள் கொடுத்து அது அதன் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று விட்டது இனி அவர் அது சம்பந்தமான நல்ல நீதியை தருவார்கள் .ரமலான் கரீம்.
14. Re:...சுற்றி வளைப்பானேன் ? posted byசாளை பஷீர் (சதுக்கை தெரு, காயல்பட்டினம்)[23 July 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 28857
ஏம்பா ! வள வள வென்று நாலு பக்கத்துக்கு எழுதிக்கிட்டு ? பேசாம ஒற்றை வரியில் மக்கள் பணத்தை கை வைக்க தலைவி தடையாக இருக்கிறாள் என சொல்லி விட்டு போக வேண்டியதுதானே
15. Re:... posted byCADER (JAIPUR)[23 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28858
உறுப்பினர் அவர்களுக்கு, அன்பான வேண்டுகோள்.
நாம் இந்த புனித ரமழான் மாதத்தில் செய்த நன்மைகளுக்கு அல்லாஹ் பலமடங்கு நன்மைகளை தருவான். அதே சமயத்தில் நாம் செய்கின்ற பொய் பித்தலாட்டங்கள் நன்மைகளை அழித்து தீமையை தரும். எனவே அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.
அல்லாஹ்தஆலா தன் அருள் மறையிலே ''ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்து விடவேண்டாம்'' என்று கூறியுள்ளான். இந்த மறைகூறும் வசனத்தின் படி நாம் ஒற்றுமையாக இருந்தால் ஈருலகிலும் வெற்றி நிச்சயம்.
அல்லாஹ் மிகவும் அறிந்தவனாகவும் கண்காணிப்பவனாகவும் இருகின்றான்.
16. மக்களுக்கு நன்றாகத் தெரியும் மகராசன்களின் லட்சணம்....! posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[23 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28859
நான் எழுதிய கருத்துப்பதிவை மேற்கோள் காட்டியமைக்காகவே இந்த பதிலை தருகின்றேன்.
அன்பு நண்பர் Vilack SMA அவர்களே...? யார் இப்புனித ரமழான் மாதத்தில் பொய்யுரைக்கின்றார்? நான் கருத்தில் கூறிய நகர்மன்ற உறுப்பினர்களாகிய மஹான்களின் பரிசுத்தமான அத்தனை வார்த்தை ஜாலங்களுக்கும் என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. உங்க பரிசுத்தமான பத்தரைமாற்றுத் தங்கங்களின் வாய் ஜாலங்களும் வண்டவாளங்களும் இணையதளங்கள் மூலம் மக்களாகிய நாங்கள் அறிந்து கொண்டோம். இதற்குத்தானே ஊடகம் உள்ளே வரக்கூடாது என ஊளையிட்டனர்.
சேர்மன் ஆபிதா செய்த தவறுதான் என்ன? உங்கள் மரியாதைக்குரிய, போற்றுதலுக்குரிய, ஐக்கிய பேரவையின் முச்சரிக்கையில் கையெழுத்திட மறுத்ததுதானே...? ஒரு வேளை கையெழுத்து இட்டிருந்தால் உங்கள் அபிமானத்திற்குரியவர்களால் ஆபிதாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியிருப்பீர்கள்.
இந்த மண் எங்கள் சொந்த மண்! இதில் நாட்டாமை பண்ணுவதற்கோ, கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கோ ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம். அவர்களின் கொட்டம் அவர்கள் விலை கொடுத்து வாங்கிய அடிமைகளிடம் மட்டுமே இருக்கட்டும். எங்களிடம் வேண்டாம்.
ஊர் பெரியவர்கள் மதிப்பிற்குரிய பெருந்தகைகள் எம்மை வழிநடத்தும் மனசாட்சியுள்ள அந்த மூத்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். யாருக்கு ஈகோ...யாருக்கு....(?) வேண்டாம் நோன்பு வைத்துள்ளேன்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் என்ற பழைய அம்புலிமாமா கதை தான் ஞாபகம் வருது.... நம்ம வேதாளங்கள் ரமலான் மாதத்திலுமா முருங்கை மரம் ஏறும்? என்ன எழவோ இப்போ எல்லாம் இவங்களை பற்றிய செய்தியை பார்த்தாலே எரிச்சல் தான் வருது.. பாவம் அந்த பெண் எப்படிதான் இந்த கூட்டத்திற்கு மத்தியில் இருக்கிறாரோ? செய்தியாக படிக்கவே நமக்கு முடியலே!! பார்ப்போம் எப்போதான் அடங்குவார்கள் என்று!!
19. யார் .... யாருக்கு எந்த வகை நிர்பந்தமோ - எதிர்ப்பார்ப்புக்களோ...! அனைத்தையும் இறைவன் அறிவான்...! அதற்காக இப்படியா...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[23 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28865
உண்மையேலேயே இது பொய் சத்தியத்திற்கும் - உண்மையான சத்தியத்திற்கும் நடக்கும் போர் இது...!
இவர்களின் 12 குற்றசாட்டும் உண்மை தான் என்று முஸ்லிமல்லாதவர்களைத் தவிர்த்து மீதமுள்ளவர்கள் திருக்குரானின் (இறைவேதத்தின்) மீது சத்தியம் செய்வார்களா...? இதற்க்கு முன்வருவார்களா...?
இந்த புனித ரமலான் மாதத்தில் இந்த மாதிரி பொய்யான மனுவில் ஒப்பம் (கையெழுத்து) போட எப்படித்தான் இந்த முஸ்லீம் ஆண் - பெண் உறுப்பினர்களுக்கு மனது வருகிறதோ...!
நகரில் நல்ல பெரும் புகழும் பெரும் மதிப்பும் கொண்ட குடும்பத்திலுள்ள ஒரு பெண் உறுப்பினரும் இந்த மனுவில் கையெழுத்து போட்டு இருப்பது மிக வேதனையான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது...
நகரமன்ற தலைவிக்கு எதிராக இனி அனுப்பும் மனுவில் கொஞ்சம் ஒரு நிமிடம் இறைவனை உள்ளத்தில் நினைத்து எதுவகாக இருந்தாலும் ஆராய்ந்து உண்மை எது - பொய் எது என பிரித்து பார்த்து ஒப்பம் (கையெழுத்து) போடுவது சிறந்தது...!
யாரோ ஒருவர் தலைவிக்கு எதிராக மனு எழுத சொல்லி அது எழுதப்பட்டு அதில் ஒருவர் ஒப்பம் கேட்ட உடனே ஒப்பமிடுவதா...?
யார் .... யாருக்கு எந்த வகை நிர்பந்தமோ - எதிர்ப்பார்ப்புக்களோ...! அனைத்தையும் இறைவன் அறிவான்...! அதற்காக இப்படியா...?
21. Re:... posted byVilack SMA (Zibo , Shandong , China)[23 July 2013] IP: 222.*.*.* China | Comment Reference Number: 28867
Response to comment 28859
[ நான் கருத்தில் கூறிய நகர்மன்ற உறுப்பினர்களாகிய மஹான்களின் பரிசுத்தமான அத்தனை வார்த்தை ஜாலங்களுக்கும் என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. ]
உங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது உண்மைதான் . அதில் எந்த அளவுக்கு edit செய்யப்பட்டு மக்களிடம் போய் சேர்கிறது என்பதும் எனக்கு தெரியும் . கடந்த டிசம்பர் மற்றும் இந்த வருட ஜனவரி மாத கூட்டத்திலும் பார்வையாளராக கலந்து கொண்டேன் . இந்த கூட்டத்தைபற்றிய செய்தியில் கருத்துபதிவில் , நான் நேரிடையாக பார்த்த சம்பவங்கள் அனைத்தையும் எழுதினேன் . அந்த கூட்டத்தில் என்ன நடந்தது , பிரச்சினைகள் யாரால் எழுந்தது , நீங்கள் தங்கதாரகையாக வர்ணிக்கும் இந்த தலைவி அவர்கள் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் நேரில் பார்த்த சாட்சியாக எழுதினேன் . comment மறுக்கப்பட்டு விட்டது . வீடியோ ஆதாரம் உள்ளது என்று மார்தட்டும் நீங்கள் என்னுடைய கருத்தை மறுத்தது ஏன் ?
இப்போது யார் பொய் சொல்கிறார் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் .
[ இந்த மண் எங்கள் சொந்த மண்! இதில் நாட்டாமை பண்ணுவதற்கோ, கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கோ ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம். ]
எங்களுக்கும் இந்த ஊர்தான் சொந்த மண் . இதில் விபரம் புரியாமல் சட்டத்தை கையில் எடுத்துகொண்டு , ஆணவம் , அதிகார துஸ்பிரயோகம் பண்ணுவதற்கோ ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் . தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று வந்து , அதிகார துஸ்பிரயோகம் செய்தவர்கள் , ஆட்சி பறி போய் மண்ணை கவ்விய சம்பவங்கள் பல உள்ளது இந்திய சரித்திரத்தில் .
இது நோன்பு நேரம் . பொய்யுரைப்பவர்கள் மீது அல்லாஹ் தன் ஆற்றலை காட்டுவான் . கடந்த டிசம்பர் மற்றும் இந்த வருட ஜனவரி மாத கூட்ட நிகழ்வுகள் பற்றிய வீடியோ ஆதாரங்களை ஒரு கடுகளவுகூட edit செய்யாமல் காட்டுங்கள் . நான் எழுதிய கருத்துகள் , இங்கே மறுக்கப்பட்டு மற்ற இணைய தளத்தில் வந்தவைகள் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கலாம் . யார் பொய்யுரைத்தார் என்பது விளங்கும் .
22. அநீதி இழைக்கப் பட்டவனது மன்றாட்டத்திற்கும் அல்லாஹ்விற்கும் இடையில் திரை கிடையாது posted byS.A.MUHAMMAD ALI VELLI (Dubai)[23 July 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28868
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தி நமது நகராட்சி தலைவிக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
எகிப்தில் இராணுவ நீதி மன்றத்தில் அதிபர் முர்ஷி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரனைகள் நேற்று ஆரம்பமாகிய பொழுது விசாரணை நடத்தியவர்களைப் பார்த்து : இன்ஷா அல்லாஹ் நாளை இறுதித் தீர்ப்பு நாளில் உங்கள் மீதும் விசாரனைகள் இடம் பெறும் அப்பொழுது அல்லாஹ் கேட்பான் ” அக்கிரமம் அநீதி என்று தெரிந்தும் எனது அடியான் முஹம்மது முர்ஷியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினீர்கள்”, நிச்சயமாக அநீதி இழைக்கப் பட்டவனது மன்றாட்டத்திற்கும் அல்லாஹ்விற்கும் இடையில் திரை கிடையாது என்று ஜனாதிபதி முர்ஷி கூறிய பொழுது விசாரணை நடாத்திய அதிகாரிகளில் சிலர் அழுது விட்டனராம்.
என்னத்தான் நமது ஊர் நகர் மன்றதில் நடக்கிறது என்றே நம் யாவர்களுக்கும் சுத்தமாகவே புரிய வில்லை தான் .....ஓன்று மட்டும் நமக்கு வெட்ட வெளிச்சமாகவே தெரிவது ...நமது பொது மக்களின் வரிப்பணம் வினாவது ....வேதனையான விசையம் அல்லவா .....
நமது அருமை அன்பு சகோதரர்.M.N.L.MOHAMED RAFEEQ அவர்களின் கருத்து படி இன்ஷா அல்லாஹ் இனி வரகூடிய நகர் மன்ற தேர்தலில் இந்த 16 உறுப்பினர்களும் கண்டிப்பான முறையில் நம் மக்கள் முன் நின்று ஒட்டு கேட்டு எப்படி தான் வெற்றி பெறுவார்கள் என்பது தான் கேள்வி குறியாகவே உள்ளது......ஐயயோ ...நடக்காத காரியத்தை நாம் நினைத்து பார்க்கிறோமோ .....என்கிற எண்ணமும் நம் யாவர்களின் மனதில் தோண்டுகிறது ....
நமது ஊர் அனைத்து தரப்பு பகுதி பொது மக்களால் ஒட்டு மொத்தமாக மனதார நேரடியாகவே மக்களால் தேர்வு செய்ய பட்ட ...ஒரு திறமைமிக்க ஒரு அருமையான / நேர்மையான ...பொறுப்பு உள்ள ரொம்பவும் கெட்டிக்கார நமது ஊர் தலைவி அவர்களை யாராலும் நிச்சயமாகவே ஒன்றும் செய்யவே முடியாது தான் ....
தயவு செய்து நம் அருமையான தலைவி அவர்களை கொஞ்சம் நேர்மையாக பொது மக்களுக்கும் ....ஊருக்கும் ...வேலை செய்ய வழி விடுங்கள்....என்று தான் நாங்கள் கேட்கிறோம் ......
நம் பொது மக்கள் அனைவர்களின் வரி பணமும் வேஸ்டாகாமல் ....நமக்கே கிடைக்க வழி தாருங்கள் .... + நம் நகர் மன்றத்தையும் வழி நடத்த விடுங்கள் .....உங்களையே முழுக்க நம்பி உள்ள தங்களின் தொகுதி பொது மக்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் ...காலத்தை கடத்தாதீர்கள் ........
தயவு செய்து நம் உறுப்பினர்கள் இது போன்ற தேவைகற்ற வேலைகளை நிப்பாட்டி நம் ஊர் மக்களுக்கு நல்லதை செய்ய கூடிய வழியை பார்ப்பது தான் சிறப்பானது . நம் மக்கள் தங்கள் யாவர்களையும் முழுமையாகவே நம்பி உள்ளார்கள் என்பதை தாங்கள் யாவர்களும் மறக்க வேண்டாம்.
24. Re:... posted bymohamed faiz (saudi arabia)[24 July 2013] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28871
In the name of allah , We wont get or allow to give money ( Corruption ) and we follow the chairman and we will work wid the chairman together ... Word is a word that they wont keep up their words. Super O Super நீகலம் நல்ல வருவிங்கட , சொல்லுறதுக்கு ஒன்றும் இல்ல.... ச வெறுத்து போச்சி இவங்க பண்றதா பார்த்து ... இப்படி பண்டவன்களுக்கு இப்படி பட்ட சைர்மன் தேவை .....
25. Re:...சகோதரி ஆபிதாவுக்கு..... posted byHusain Noorudeen (Abu Dhabi)[24 July 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28876
அன்பு சகோதரி ஆபிதாவுக்கு,
இந்த குள்ள நரி கூட்டம் உங்களை இனியும் செயல்பட விடும் என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை. இந்த கூட்டம் விட்டாலும், அதனை வழிநடத்திக்கொண்டு இருக்கும் தலைவரும், அவருக்கு துணை நிற்கும் பெரிய அவையும் விடப்போறதில்லை.
பேசாம, சட்டத்துல வழி இருந்தா, உங்க மன்றத்த கலைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுதி அனுப்பிட்டு இந்த கூட்டத்த மக்கள் மன்றத்த சந்திக்கச் சொல்லுங்க.
அப்படி வழி இல்லாத பட்சத்தில், நீங்க பேசாம ராஜினாமா பண்ணிட்டு போய் நிம்மதியா இருங்க. அடுத்த தேர்தல்னு ஒண்ணு வராமயா போயிடும், ஊர் மக்கள் இந்த குள்ள நரிக்கூட்டத்தின் கொட்டத்தை அதுக்குள்ள மறந்தா போயிடுவாங்க.
26. நகராட்சி!! posted bySalai. Mohamed Mohideen (Bangalore)[24 July 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 28877
அரசியலாகி போன நகராட்சியில் தொடர்ந்து அமளி துமளி அல்லது இது மாதிரி ஏதாவது பண்ணி கொண்டிருக்க வேண்டும். அப்பத்தான் அதற்கான ஊதியம் (அளப்போரிடத்தில் இருந்து) கிடைக்கும். அதுவும் அள்ளிக்கொடுக்கும் நோம்பு மாசம் வேற இது. 'நிறைய' கிடைக்காமலா போயிடும் !!
27. Re:... posted bySabeer (Mumbai)[24 July 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 28878
என்னத்த சொல்ல... தேர்தலுக்கு முன் நான் நகர்மன்றத் தலைவிக்கு ஆதரவாக என்றென்றும் இருப்பேன் வார்டுக்கு நல்லது செய்வேன் என்று சொல்லி வாக்குகள் வாங்கியவர்களெல்லாம் இப்போது மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் மகாராஜனின் சொல் கேட்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களுடைய ஓட்டை வாங்கியாச்சு. இனி என்ன மக்கள் நம்மை கேட்பது என்ற தைரியம். உங்களிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன். தலைவரை பதவி நீக்கம் செய்ய 16 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்துள்ளீர்கள். உங்களை தேர்ந்தெடுத்த நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளோமே. உங்களை பதவி நீக்கம் செய்ய நாங்கள் யாரிடத்தில் முறையிடுவது. உங்கள் மீது அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கலாமா?
எனது வார்டுக்குட்பட்ட (கி.மு.கச்சேரி தெரு) உறுப்பினர் சகோதரர் ஜகாங்கிரை கேட்கிறேன். பதவியேற்று இரண்டரை வருடங்களாகி விட்டது. தாங்கள் இந்த வார்டுக்காக என்ன தான் செய்துள்ளீர்கள். ஏதாவாது ஒரு தெரு செப்பனிடப்பட்டுள்ளதா? அல்லது புதிதாக ரோடு ஏதும் போடப்பட்டுள்ளதா? எத்தனையோ நகர்மன்றக் கூட்டங்கள் இது வரை நடைபெற்று முடிந்துள்ளன. எந்த கூட்டத்திலாவது தங்களது வார்டுக்குட்பட்ட கோரிக்கையாக ஏதாவது வைத்துள்ளீரா? 5வது வார்டு சம்பந்தமாக ஏதாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? ஒன்றுமே இல்லை. கி.;மு. கச்சேரி தெரு குண்டும் குழியுமாகத் தான் இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க உங்களுக்கு நேரம் எங்கே இருக்கப் போகிறது.
ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள்! நேர்மையான வழியில் சம்பாதிக்கும் பணம் மட்டுமே தரிபடும். மற்றவைகளெல்லாம் வந்த இடம் தெரியாமல் போய் விடும். இறைவன் மீது பயபக்தி உள்ள யாரும் இந்த செயலை செய்ய மாட்டார்கள். மார்க்கப் பற்று மிக்கவர் ஒரு அறக்கட்டளையை நிர்வகித்து வரும் ஒருவரும் இவர்களோடு சேர்ந்துள்ளது வியப்பாக உள்ளது. எல்லோரும் இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் உண்மையில் சகோதரி ஆபிதா அவர்களை சரித்திரம் காயல்பட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு புரட்சிப் பெண் என்று நிச்சயம் சொல்லும்.
30. Re:...மீண்டும் தோல்வியை நோக்கி ... posted byb.a.buhari (chennai)[25 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28946
மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு தலைவியை உங்களால் ஒன்னும் பண்ணமுடியாது. மீண்டும் மூக்கு உடைபட்டு தோல்வியை அடையா போகிண்டீர்கள் . உங்களை சொல்லி புரஜனம் இல்லை நீங்கள் என்ன பனுவீர்கள், எல்லாம் மேலிடம் உத்தரவு, சொந்தமாக நீங்கள் think பண்ணினால் மட்டும் இந்த problem solve ஆகும்
31. Re:... posted byM.Jahangir (Kayalpatnam)[25 July 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 28957
சகோதரர் சபீர் அவர்களே நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் என் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளதால் (என் வார்டுக்கு உட்பட்ட குற்றச்சாட்டு என்பதால்) நான் அதற்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளேன்.
உங்கள் தெருவிற்கு என்ன செய்துள்ளேன் என்று, உங்கள் தெரு வாசிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
கேட்பாறற்று கிடந்த குடிநீர் வாழ்வு தொட்டிக்கு மூடி அமைக்கும் பணியை செய்ய வேண்டி, நகர்மன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற முதல் கூட்டத்திலேயே கோரிக்கை கொடுத்து, அதற்காக விவாதிக்கவும் செய்தேன்.
விவாதம் முடிவில் நகரின் அனைத்து பகுதியிலும் உள்ள வால்வு தொட்டிகளுக்கு மூடி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் முடிவடைய போகிறது. இன்று வரை நகரின் எந்த பகுதிகளிலும் உள்ள குடிநீர் வாழ்வு தொட்டிக்கு மூடி அமைக்க நிர்வாக திறமையற்றவரின் தேவையற்ற குறுக்கீட்டால், தடையால் இயலவில்லை.
ஆனால் நான் என் இரத்தத்தை வேர்வையாக சிந்தி நேர்மையாக சம்பாதித்த சொந்த பணத்தில் அதற்கு மூடி அமைத்தேன். இது நம்மை படைத்த இறைவனுக்கு தெரியும்.
ஒரு ரோடு அமைத்து 5 வருடங்களுக்கு பிறகே மீண்டும், ரோடு அமைக்க முடியும். கடந்த போர்டின் இறுதி காலத்திலேயே உங்களது ரோடு போடப்பட்டது.
இறைவன் மீது ஆணையாக, நான் இதுநாள் வரை யாரிடமும், எதற்காகவும் லஞ்சமோ அல்லது எந்த பணிக்காகவும் ஊழலோ செய்தது இல்லை.
5-வது வார்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இதுவரை நான் ஆற்றியுள்ள பணிகளை மனசாட்சி உள்ள நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள். நேரம் வரும் போது அவைகளை நான் பட்டியலிடுவேன்.
இருப்பினும் ஏதேனும் குறைகள் இருக்கின்றது என்பதை தெரியப்படுத்தினால். இன்ஷாஅல்லாஹ் அதனை நிவர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன்.
எவரையும் புகழ்ந்துவிட்டு போகுங்கள், அதற்காக மற்றவர்களை இகழாதீர்கள்.
32. இறைவேதத்தின் மீது கைவைத்து சத்தியம் செய்ய முன் வர முடியுமா,....? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[26 July 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 28963
*என் இரத்தத்தை வேர்வையாக சிந்தி நேர்மையாக சம்பாதித்த சொந்த பணத்தில் அதற்கு மூடி அமைத்தேன்) C P )
தலைவியின் சொந்த பணம் மட்டும் கருப்பு பணம் ஆகிவிடுமா...? இறைவன் மீது ஆணையாக, நான் இதுநாள் வரை யாரிடமும், எதற்காகவும் லஞ்சமோ அல்லது எந்த பணிக்காகவும் ஊழலோ செய்தது இல்லை. (C - P) என்று கூறும் நீர் தலைவிக்கு எதிராக (கருப்பு பணம்) விசியதிதில் இறைவன் மீது ஆணையாக இறைவேதத்தின் மீது கைவைத்து சத்தியம் செய்ய முன் வர முடியுமா,....? இதை படித்து விட்டு எனக்கு பதில் தாருங்கள் பார்போம்....?
உண்மையான ஈமான் இறை நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் என் கேள்விக்கு உடனே சத்தியம் செய்ய வேண்டும் - எதிர் பார்க்கிறேன் ,,, தாங்கள் இது விசியத்தில் விலகி போனால் உங்கள் யோக்கிதை எப்படி என்று அனைவரும் அறிந்து கொள்வார்கள்,,,, இந்த புனித ரமலானில் தாங்கள் இந்த சத்திய அழைப்பில் இருந்து நழுவ வேண்டாம்... அணைத்து அழைப்பையும் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான்...
உங்களுக்கு சாதகம் எதுவோ அது எல்லாம் சரி என்று மக்கள் அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்...!
33. கருப்பு பணமா - நம்மை படைத்த இறைவனுக்கு தெரியாதா...? posted bysyed ahamed (காயல்பட்டினம்.)[26 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28971
நான் என் இரத்தத்தை வேர்வையாக சிந்தி நேர்மையாக சம்பாதித்த சொந்த பணத்தில் அதற்கு மூடி அமைத்தேன். இது நம்மை படைத்த இறைவனுக்கு தெரியும் என்று கூறும் உறுப்பினர் ஜகாங்கீர்,,,
மத நலினக்க விழாவில் நகர்மன்ற தலைவி செலவு செய்த பணம் நகர்மன்ற தலைவியின் சொந்த உழைப்பின் பணம் என்று நம்மை படைத்த இறைவனுக்கு தெரியாதா...?
நீங்கள் செலவு செய்தால் அது நேர்மையாக சம்பாதித்த சொந்த பணம்.
அதுவே நகர்மன்ற தலைவி நேர்மையாக சம்பாதித்த பணத்தை செலவு செய்தால் அது எப்படி உங்களுக்கு கருப்பு பணமாக மாறுகிறது.
34. போங்க...போங்க...உங்க பம்மாத்து பப்பு எல்லாம் இனி ஒரு காலத்துலெயும் வேகாது. posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[26 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28972
துப்புக்கெட்ட கழுதைக்கு உப்பு மூட்டை தூக்க சக்தி இல்லையாம் இந்த பழமொழியை நாம இப்படி வச்சுக்கலாம் துப்பு கெட்ட கழுதைக்கு உப்பு சப்பில்லாத குத்தம் குறையாம்.
போங்க...போங்க...உங்க பம்மாத்து பப்பு எல்லாம் இனி ஒரு காலத்துலெயும் வேகாது. மக்கள் விழிப்போடு கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். (ஏ) செக்ஷன்லெ போட்டலும் சரி (பி) செக்ஷன்லெ போட்டலும் சரி! கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரி சேர்மன் ஆபிதா அவர்களை ஒன்னும் பண்ண முடியாது! இப்படி ட்ரை பண்ணி பண்ணியே அஞ்சு வருஷத்தை ஓட்டிடுங்க....
35. Re:... posted byCADER (JAIPUR)[27 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28984
15 உறுப்பினர்கள் பதவி நீக்குமாறு பரிந்துரைத்தால் பதவியை நீக்கமுடியும் என்று சட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்கள் அதே சமயத்தில் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களையும் பதவி நீக்க அந்தந்த வார்டு மக்கள் என்ன செய்ய வேண்டும்? சட்டத்தில் எதுவும் இருக்கிறதா? என்று தெரிந்தால் தெரிய படுத்தவும் இது மக்களுக்கு மிகுந்த பிரயோஜனம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross