காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில், குற்றால சீசன் காரணமாக வெயில் கொடுமை தனிந்திருந்தாலும், இப்பகுதியில் மழை பெய்வதேயில்லையே என்ற ஏக்கம் அனைவரிடமும் இருந்து வந்தது. அதுவும், ரமழான் மாதம் துவங்கிவிட்டதால், நகரில் வீசும் சிறியளவிலான வெயிலும் கூட கடுமையானதாக பொதுமக்களால் உணர முடிந்தது. இதனால் மழை ஏக்கம் கூடுதலானது.
இந்நிலையில், இன்று மதியம் சுமார் 03.30 மணியளவில் திடீரென வானம் இருட்டி, மழைக்காற்று வீசத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் பெரிய துளிகளுடன் மழை பெய்தது.
சுமார் 10 நிமிடங்கள் மட்டும் நீடித்த இம்மழை காரணமாக, நகரில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர், காயல்பட்டணம்.காம். |