Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:08:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11362
#KOTW11362
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 24, 2013
ரமழான் 1434: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3070 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் அலியார் தெருவின் தென்பகுதியில், குட்டியப்பா பள்ளிக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல். இப்பள்ளி, 13.07.2012 அன்று திறக்கப்பட்டது.



இப்பள்ளிக்கென தனி நிர்வாகம் கிடையாது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை தலைவர் எஸ்.ஷம்சுத்தீன், துணைத்தலைவர் சாளை முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா, இணைச் செயலாளர்களான நூர் எலக்ட்ரானிக்ஸ் ஷஃபீக், எலக்ட்ரீஷியன் ஸலாஹுத்தீன், துணைச் செயலாளர் ஹஸனா லெப்பை, பொருளாளர் ஜப்பான் சுலைமான், மாவட்ட செயலாளர் லக்கீ கூலர் மக்கீ ஆகியோருடன் இணைந்து, த.த.ஜ. உறுப்பினர்களும், ஆர்வலர்களும் இப்பள்ளியை நிர்வகித்து வருகின்றனர்.

நாள்தோறும் ஐவேளை தொழுகை நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில், ரமழான் அல்லாத காலங்களில் நாள்தோறும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சில நிமிடங்கள் திருக்குர்ஆன் விளக்கவுரை நடத்தப்படுகிறது. வாரந்தோறும் புதன்கிழமை பின்னேரம் ஹதீஸ் வகுப்பும், சனி பின்னேரம் திருக்குர்ஆன் வகுப்பும் மஃரிப் தொழுகைக்குப் பின் நடத்தப்பட்டு வருகிறது.

சிறுவர் - சிறுமியருக்காக இப்பள்ளியில் திருக்குர்ஆன் ஓத பயிற்றுவிப்பதற்கென மக்தப் நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் காலை 07.00 மணிக்கும், மாலை 05.00 மணிக்கும் நடத்தப்படும் இந்த மக்தபில், உள்ளூரைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் பயின்று வருகின்றனர்.

பள்ளி செல்லும் மாணவ-மாணவியர் தமது வாராந்திர விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழித்திடச் செய்வதற்காக, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் தீனிய்யாத் – மார்க்க அடிப்படைக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் சுமார் 100 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதத்தில், நகர பள்ளி மாணவ-மாணவியருக்கான கோடைகால மார்க்க அடிப்படைக் கல்வி பயிற்சி முகாம் (Summer Course) நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஹஜ் பெருநாளையொட்டி த.த.ஜ. நகர கிளை சார்பாக செய்யப்பட்டு வரும் உள்ஹிய்யா ஏற்பாடுகள், ரமழான் இறுதியில் ஏழை - எளியோருக்கு வழங்கப்படும் ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட செயல்திட்டங்கள் கடந்த ஆண்டு முதல் இப்பள்ளி வளாகத்திலேயே செய்யப்பட்டு வருகிறது.

ஏழை - எளியோருக்கு உதவும் நோக்குடன் ஜகாத் - ஸதக்கா நிதி சேகரிக்கப்பட்டு, “பைத்துல்மால்” பிரிவும் இப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

ரமழான் மாதத்தில் நாள்தோறும் லுஹர் தொழுகைக்குப் பின் மிஷ்காத் வகுப்பு, மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, இரவுத் தொழுகை, அதன் பின்னர் “அர்ஷின் நிழலில் இடம் பிடிக்கும் அந்த 7 சாரார் யார்?” என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவும் நடத்தப்படுகிறது.

இப்பள்ளியின் இமாமாக - ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ பணியாற்றி வருகிறார். இங்கு நடத்தப்படும் மார்க்க விளக்கவுரை வகுப்புகள் அனைத்தையும் இவரே நடத்தி வருகிறார். பள்ளியின் பிலாலாக, காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஸாம் ஷிஹாபுத்தீன் பணியாற்றி வருகிறார். நாள்தோறும் நடத்தப்படும் இரவுத் தொழுகையை இவரே வழிநடத்துகிறார்.

வழமை போல நடப்பாண்டிலும் ரமழானை முன்னிட்டு, நாள்தோறும் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாலையில் ஊற்றுக்கஞ்சி வினியோகம் நடைபெறுகிறது. சுமார் 30 குடும்பங்கள் பெற்றுச் செல்கின்றனர்.

இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி இப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 60 ஆண்களும், சுமார் 20 பெண்களும் பங்கேற்கின்றனர். பெண்களுக்கு நோன்பு துறக்க தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், வடை வகைகள், குளிர்பானம், அவ்வப்போது பழங்கள் பரிமாறப்படுகிறது. இம்மாதம் 12ஆம் தேதியன்று இங்கு நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படப்பதிவுகள் வருமாறு:-









காயல்பட்டினம் நகரிலேயே - இப்பள்ளியிலும், கோமான் மொட்டையார் பள்ளியருகிலுள்ள பெண்கள் தைக்காவிலும் மட்டுமே பெண்களுக்கும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கு கறி கஞ்சி தயாரிக்க நாளொன்றுக்கு ரூபாய் 4,000 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 2,500 தொகையும், பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 7,000 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது.

இப்பள்ளியின் கடந்தாண்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
துபையில் காயலர் மரணம்!  (24/7/2013) [Views - 5220; Comments - 56]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved