காயல்பட்டினம் பரிமார் தெரு - அலியார் தெருவை அணைத்தாற்போல் - ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் முகப்புடன் அமைந்துள்ளது மஸ்ஜித் அஸ்ஸூக் என்ற கடைப்பள்ளிவாசல்.
இப்பள்ளியின் தலைவராக ‘பெயிண்டர்’ மீரான், செயலாளராக அபூபக்கர் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக 22 பேரும் சேவையாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியின் இமாமாக காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவைச் சேர்ந்த செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் என்பவரும், பிலாலாக காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.அஹ்மத் ஸாமுனா லெப்பை என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இட நெருக்கடி, கட்டிடத்தில் பழுது ஆகிய காரணங்களுக்காக, இப்பள்ளி கட்டிடத்தின் பழைய அமைப்பு மாறாமல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர, பெண்கள் தொழுவதற்காக தைக்கா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திட கேளரங்கு உள்ளிட்ட தேவைகளைக் கருத்திற்கொண்டு - பெண்கள் தைக்கா மற்றும் பன்னோக்கு அரங்கம் ஒன்று, இப்பள்ளியையொட்டிய தென்பகுதியில், இந்த ஜமாஅத்திற்குட்பட்ட - பரிமார் தெருவைச் சேர்ந்த ஒருவரது முழு அனுசரணையில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பள்ளியில், தினமும் ஐவேளைத் தொழுகை தவிர, ரமழான் காலங்களில் தராவீஹ் சிறப்புத் தொழுகை நடத்தப்படுகிறது.
வழமை போல இவ்வாண்டும், நாள்தோறும் இஃப்தார் - நோன்பு துறப்பிற்காக கஞ்சி தயாரிக்கப்படுகிறது. ஊற்றுக்கஞ்சி வினியோகம் கிடையாது.
நாளொன்றுக்கு பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 4,000 தொகையும், கறி கஞ்சிக்கு ரூபாய் 3,400 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 2,800 தொகையும் செலவிடப்படுகிறது. இச்செலவு, அன்றைய ஒருநாள் ரமழான் சிறப்புச் செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கும்.
நாள்தோறும் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 100 முதல் 150 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு - பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை, கஞ்சி, வெண்கஞ்சி எனில் சட்னி உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகின்றன.
19.07.2013 அன்று மாலையில், இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளியின் கடந்தாண்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இப்பள்ளியின் வரலாறு உள்ளிட்ட முக்கிய தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |