நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நாள்தோறும் இரவுத் தொழுகை நிறைவுற்றவுடன் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு நடத்தப்படுகிறது.
இம்மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்ற வகுப்புகளை, மவ்லவீ ஸதக்கத்துல்லாஹ் உமரீ நடத்தினார்.
20 முதல் 22ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற வகுப்புகளை நாகூரைச் சேர்ந்த மவ்லவீ முஹம்மத் அன்ஸார் ஃபிர்தவ்ஸீயும், 23, 24 தேதிகளில் நடைபெற்ற வகுப்புகளை, மவ்லவீ முஹம்மத் மிர்ஷாத் மக்தூமியும் நடத்தினர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்ற இரவுத் தொழுகையில் பங்கேற்ற பொதுமக்கள் இவ்வகுப்பில் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இன்று (ஜூலை 25) இரவு நடைபெறும் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பை, மவ்லவீ மிஸ்பாஹுல் ஹுதா நடத்துகிறார்.
திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகங்கள் இணைந்து செய்து வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஐ.ஐ.எம். வளாகத்தில் நடைபெற்று வந்த இந்த திருக்குர்ஆன் தொடர் வகுப்பு, நடப்பாண்டில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றவுள்ள மார்க்க அறிஞர்களின் பெயர், அவர்களது உரை இடம்பெறும் நாள் உள்ளிட்ட விபரங்களடங்கிய பட்டியல் வருமாறு:-
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தகவல்:
S.அப்துல் வாஹித் |