நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் ஜாவியாவில், இம்மாதம் 11ஆம் தேதி முதல் நாள்தோறும் (வெள்ளிக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணிக்கு சன்மார்க்க தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியரும், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் இந்நிகழ்வில் சொற்பொழிவாற்றி வருகின்றனர்.
இம்மாதம் 23, 24 தேதிகளில் அன்று மவ்லவீ ஹாஃபிழ் காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ உரையாற்றினார்.
இன்று (ஜூலை 25), மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.இர்ஷாத் ஃபாஸீ யூஸுஃபீ ஃபாழில் தேவ்பந்தீ உரையாற்றினார்.
நாளை வெள்ளிக்கிழமையாதலால் சொற்பொழிவு நடைபெறாது என்றும், நாளை மறுநாள் சனிக்கிழமையன்று (ஜூலை 27) மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷீஃபீ உரையாற்றுவார் என்றும் ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் ஒலி நேரலையை, www.ustream.tv/channel/zaviakayal என்ற இணையதள பக்கத்தில் கேட்கலாம்.
ஜாவியா ரமழான் தொடர் சொற்பொழிவு குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |