Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:41:44 PM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11379
#KOTW11379
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 25, 2013
ரமழான் 1434: குருவித்துறைப் பள்ளியில் நோன்புக் கஞ்சி வினியோகம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3776 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அமைவிடம்:

காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், தீவுத்தெரு - ஸீ-கஸ்டம்ஸ் சாலை, முத்துவாப்பா தைக்கா தெரு, சொளுக்கார் தெரு ஆகியவற்றை அணைத்தாற்போல் அமைந்துள்ளது மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் எனும் குருவித்துறைப்பள்ளி.





நிர்வாகம்:

இப்பள்ளியின் தலைவராக சேவையாற்றிய மர்ஹூம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஜுமானீ அவர்களின் மறைவுக்குப் பின், பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் அப்பொறுப்பைத் தற்காலிகமாகக் கவனித்து வருகிறார்.

ஹாஜி எஸ்.எம்.கபீர் பள்ளியின் செயலாளராகவும், ஹாஜி எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் (எஸ்.ஜே.எம்.மெடிக்கல்ஸ்), ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் (சுலைமானிய்யா கார்ப்பரேஷன்) ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் சேவையாற்றி வருகின்றனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு:

நடப்பாண்டு, ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் நிறைவுற்ற பின் பள்ளியின் பொதுக்குழு கூட்டப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இமாம் - பிலால்:

காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களான அஃப்ஸலுல் உலமா மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ பள்ளியின் இமாமாகவும், சதக்கு இப்றாஹீம் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.

நடப்பாண்டு ரமழான் தராவீஹ் சிறப்புத் தொழுகையை, காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நளீம் (ஹாங்காங்) என்பவரின் மகனும், ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் அண்மையில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்றவருமான ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் ஸாலிஹ் வழிநடத்துகிறார்.

வழமை செயல்பாடுகள்:

ரமழான் அல்லாத காலங்களில் நாள்தோறும் ஐவேளை தொழுகையும், ரபீஉல் அவ்வல் மாதம் முதல் 12 நாட்களில் ஸுப்ஹான மவ்லித் மஜ்லிஸும், ரபீஉல் ஆகிர் மாதம் முதல் 11 நாட்களில் முஹ்யித்தீன் மவ்லித் மஜ்லிஸும், ஷஃபான் மாதம் 15ஆவது இரவில், நிஸ்ஃபு ஷஃபான் சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

ரமழானில், நோன்புக் கஞ்சி வினியோகம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, தராவீஹ் தொழுகை, வித்ரிய்யா மஜ்லிஸ் ஆகியன நடத்தப்பட்டு வருகிறது.

ரமழான் பிறைக் கணக்கை பொதுமக்கள் இலகுவாக அறிந்திடும் பொருட்டு, இப்பள்ளி வளாகத்திலுள்ள கரும்பலகையில் நாள்தோறும் அரபி எழுத்துக்களுடன் பிறைக் கணக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.



ரமழான் 29ஆம் நாளன்று (கடைசி நாளன்று) மஹல்லா வாசிகள் மொத்தமாகப் பங்கேற்கும் வகையில் பள்ளி வளாகத்திலோ அல்லது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்திலோ தமாம் சாப்பாடு என்ற பெயரில் விருந்துபசரிப்பு செய்யப்படுகிறது. இதில், காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு அனைவருக்கும் ஸஹர் உணவாகப் பரிமாறப்படும்.

இப்பள்ளி மஹல்லாவிற்குட்பட்ட இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சங்கத்தில், ரமழான் மாதம் முழுவதும் நள்ளிரவு 03.30 மணி முதல் ஸஹர் நேர முடிவு வரை நாள்தோறும் ஸஹர் நேர ஒளிபரப்பு நடத்தப்பட்டு வருகிறது. ரமழான் 27ஆம் நாளன்று இரவு 12.00 மணியளவில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் இங்கு வழமையாக நடத்தப்பட்டு வருகிறது.

கஞ்சி கமிட்டி:

பள்ளியின் நடப்பாண்டு கஞ்சி தயாரிப்பு உள்ளிட்ட ரமழான் சிறப்பேற்பாடுகளை,
ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ் தலைவராகவும்,
எம்.கே.செய்யித் முஹம்மத் துணைத்தலைவராகவும்,

ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ்,
கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத்,
எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா,
ஹாஜி ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா,
ஹாஜி சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,

நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா,
எஸ்.ஏ.காஜா,
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,
எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் (மேக்)
ஆகியோர் உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்று செய்து வருகின்றனர்.





ஊற்றுக் கஞ்சி வினியோகம்:

இப்பள்ளியில் தினமும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, மாலை 05.00 மணியளவில் இல்லங்களுக்கு ஊற்றுக்கஞ்சியாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஊற்றுக்கஞ்சியை, இப்பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த குடும்பத்தினர், நகரில் வணிக நிறுவனங்களை நடத்துவோர் என 100 முதல் 150 பேர் வரை வந்து பெற்றுச் செல்கின்றனர்.

பள்ளிக்கூட பாட நேரம் நிறைவுற்ற பின்னர் கஞ்சி வினியோகிக்கப்படுவதால், ஊற்றுக்கஞ்சியைப் பெற்றிட மாணவர்கள் அதிகளவில் வருவது குறிப்பிடத்தக்கது.

செலவு விபரம்:

நடப்பாண்டு ரமழானில், பெரும்பாலும் தினமும் கறிகஞ்சியும், அவ்வப்போது வெண்கஞ்சியும் தயாரிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு
கிடா கறி கஞ்சிக்கு ரூபாய் 17,000 தொகையும்,
கோழிக் கறி கஞ்சிக்கு ரூபாய் 15,500 தொகையும்,
காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 14,000 தொகையும்,
வெண்கஞ்சிக்கு ரூபாய் 10,000 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது.

இஃப்தார் துணை உணவுப் பொருட்கள், தராவீஹ் தொழுகை நிறைவுற்ற பின் அனைவருக்கும் வழங்கப்படும் தேனீர், வித்ரிய்யா மஜ்லிஸில் வழங்கப்படும் நார்ஷா உள்ளிட்ட அன்றைய ஒருநாள் ரமழான் சிறப்பு ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவினங்களும் இதில் உள்ளடக்கம்.

இஃப்தார் நிகழ்ச்சி:

தினமும் நடத்தப்படும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் சுமார் 80 முதல் 100 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், வடை, கஞ்சி, அவ்வப்போது கடற்பாசி மற்றும் குளிர்பானமும் பரிமாறப்படுகிறது.

துஆ மஜ்லிஸ்:

இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் வீண் பேச்சுக்களைத் தவிர்த்திடும் நோக்குடன் தினமும் சுமார் 20 நிமிடங்கள் துஆ - பிரார்த்தனை மஜ்லிஸ் நடைபெறுகிறது. ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா இந்த துஆ மஜ்லிஸை நடத்தி வருகிறார்.



இம்மாதம் 17ஆம் தேதியன்று மாலையில் நோன்புக் கஞ்சி வினியோகிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-







இம்மாதம் 16ஆம் தேதியன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-















இப்பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இப்பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர், காயல்பட்டணம்.காம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by T.S.A. Aboothahir mahzari (chennai) [26 July 2013]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 28960

பூவாற்றில் அடங்கியிருக்கும் எங்கள் பாட்டனார் அல்லாமா நூஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் புதல்வரும், மஹான் செய்யித் அஹ்மத் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் தந்தையின் தந்தையுமான - இப்பள்ளிவாசலின் கீழ்ப்பகுதியில் அடங்கியிருக்கும் அல்-ஆரிஃப் பில்லாஹ் செய்யித் அஹ்மத் வலிய்யுல்லாஹ் அவர்களின் பெருமுயற்சியால் சற்றொப்ப 216 வருடங்களுக்கு முன், ஹிஜ்ரீ (1214) ஆயிரத்து இருநூற்றுப் பதினான்காம் வருடத்தில் கட்டப்பட்டது இப்பள்ளிவாசல்.

எனவே குருவின் (ஷெய்கின்) துறை பள்ளி என்பதே மருவி குருவித்துறை பள்ளி என மாறியதாகவும் தகவல் உண்டு.

அபூதாஹிர் மஹ்ழரி T S A


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by வெள்ளி முஹம்மது முஹியத்தீன் (சென்னை) [26 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28964

கஞ்சி கோப்பை கலர் மாறிட்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பெரிய ஜமாஅத்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [26 July 2013]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 28966

கஞ்சி சட்டியில் இருப்பதோ கறிக்கஞ்சி ( மஞ்சள் நிறம்).கோப்பையில் ஊற்றுவது வெள்ளை கஞ்சி.

கஞ்சி செலவுகளை பார்க்கும்போது (அதிகபட்சம் ரூபாய் 17,000) நம் ஊரில் அநேகமாக இதுதான் பெரிய ஜமாஅத் என நினைக்கிறேன் . ஒற்றுமை நீடிக்கட்டும். மாஷா அல்லாஹ்.

Moderator: ஊற்றுக்கஞ்சி வினியோகம் 17ஆம் தேதியும், இஃப்தார் நிகழ்ச்சி 16ஆம் தேதியும் பதிவு செய்யப்பட்டவை. இதுகுறித்து இச்செய்தியிலேயே விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது இந்த கூர்ந்த கவனிப்பு தொடரட்டும். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சரித்திரத்தை யார் தந்தாலும்
posted by Hameed MN (Hong Kong) [26 July 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 28978

கயல்பட்டணம்.காம் நிர்வாகிக்கு... சரித்திரத்தை யார் தந்தாலும் சரி ஆதாரமின்றி, அர்த்தமின்றி தங்களின் இணையதளத்தில் வெளியிடுவது நல்லதன்று ..

Very simple that we never use the word GURU. could you please let us know the source of information?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இது தான் உலகம்!  (25/7/2013) [Views - 3406; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved