குவைத் காயலர்கள் ஒன்றிணைந்து இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
குவைத் நாட்டில், காயலர்கள் பலர் பணி செய்து வருகின்றனர். அவர்களுள் பெரும்பாலானோர் குவைத் நகரிலுள்ள முதன்னா காம்ப்ளக்ஸ் பகுதியில் வசிக்கின்றனர்.
இக்காயலர்கள் இணைந்து, குவைத் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வசிக்கும் அனைத்து காயலர்களுக்கும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியை, ரமழான் 17ஆம் நாளன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
குவைத் - முதன்னா காம்ப்ளக்ஸிலுள்ள மாலியாவில் நடைபெற்ற இந்த இஃப்தார் நிகழ்ச்சியில், ஏராளமான காயலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி கோழிக்கறி கஞ்சி, வடை வகைகள், பழச்சாறு வகைகள், பழக்கூழ், பாம்பே ஃபிர்னி உள்ளிட்ட பதார்த்தங்கள் சுவை குன்றாது பரிமாறப்பட்டன.
இஃப்தார் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அங்கேயே மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக - கூட்டாக நிறைவேற்றப்பட்டது. ஹாஃபிழ் முஹம்மத் தனதினிய குரலில் திருமறை குர்ஆனின் வசனங்களை அழகுற ஓதி தொழுகையை வழிநடத்தியமை - அனைவரது உள்ளங்களுக்கும் இதமளித்தது.
இஃப்தார் நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் - சக்தியூட்டும் இஞ்சி தேனீர் பரிமாறப்பட்டது. மாறாத நினைவுகளுடன், காயலர்கள் தமது வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு, குவைத் காயலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
Kharafi முஹம்மத் அலீ
படங்கள்:
ஹாஃபிழ் முஹம்மத்
மற்றும்
டைமண்ட் நளீம் |