Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:59:07 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11396
#KOTW11396
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 27, 2013
காயல்பட்டினம் தொலைபேசி நிலைய கோட்ட துணைப் பொறியாளர் ஜெயக்கொடி பதவி உயர்வு பெற்றார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3597 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்தில் கோட்ட துணைப் பொறியாளராகப் பணியாற்றி வந்த இ.ஜெயக்கொடி (கைபேசி எண்: +91 94861 03858) தூத்துக்குடி கோட்டப் பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு வயது 45.

01.05.1998 அன்று தொலைதொடர்புத் துறையில் பணியில் சேர்ந்து, 09.01.2002 வரை சுமார் நான்காண்டுகள் தொலைதொடர்பு இளநிலை அலுவலராகவும், 09.01.2002 முதல் 20.07.2013 வரை சுமார் பத்தரை ஆண்டுகள் கோட்ட துணைப் பொறியாளராகவும், காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், 22.07.2013 முதல் தூத்துக்குடி கோட்ட பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

மொத்தத்தில், 15 ஆண்டுகாலம் காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்தில் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது பொறுப்பையும் சேர்த்து, காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்தின் மற்றொரு கோட்ட துணைப் பொறியாளரான பி.நம்பிராஜன் (கைபேசி எண்: +91 94861 03859) கவனித்துக்கொள்வார். காயல்பட்டினத்தில் தொலைபேசி இணைப்புகள், இன்டர்நெட் இணைப்புகள் தொடர்பானவற்றுக்கு, இனி இவரையே தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




தகவல்:
சொளுக்கு A.J.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம்.

கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தொலைபேசியை விட சுறுசுறுப்பானவர்
posted by mackie noohuthambi (kayalpatnam) [27 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28996

வாழ்த்துக்கள். தொலைபேசி மணி அடிக்க கூட தாமதமாகலாம். ஆனால் அது அடித்த அடுத்த நிமிடம் நமது கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து ஆவன செய்பவர் திரு ஜெயக்கொடி அவர்கள். இது வெறும் புகழ்ச்சி இல்லை. அவருடன் தொடர்பு கொண்டவர்களுக்கு நன்கு தெரியும்.

எத்தனை காலம் அவர் பதவி வகித்தார் எனபது முக்கியமல்ல, அவர் வகித்த பதவியால் இந்த பகுதி மக்கள் எவ்வளவு பயன்பெற்றார்கள் என்பதுதான் முக்கியம். அதுதான் அவரை மக்கள் மனதில் எப்போதும் நிலைத்து நிற்க வைக்கும்.

திரு ஜெயக்கொடி அவர்கள் இன்னும் பல உயர் பதவிகள் பெற்றாலும் எங்கு சென்றாலும் இந்த காயல்பட்டினம் மக்களுக்கு தேவையானவற்றை வழக்கம் போல் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவரை தொடர்ந்து வந்துள்ள திரு நம்பிராஜன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாருங்கள், நம்பி ராஜன் அவர்களே உங்களை நம்பி வருபவர்களுக்கு தொலைபேசி தொடர்பில் உள்ள பிரச்சினைகள் எதுவானாலும் எங்களுக்கு அவற்றை சுலபமாக தீர்த்து வைத்து எங்கள் குறைகளை நீக்கிவைத்து நீங்களும் எங்கள் உள்ளங்களில் இடம்பெற்று வாழ் வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28997

வாழ்த்துக்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துக்கள் !!
posted by Salai.Mohamed Mohideen (Bangalore) [27 July 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 28998

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தொலைபேசி வாயிலாக 'BSNL யின் ப்ராட் பேன்ட் சேவைக்காக' ஜெயக்கொடி அவர்களிடம் பேசியுள்ளேன். இப்பொழுது தான் அவருடைய முகத்தை புகைப்படம் மூலம் பார்க்கின்றேன்.

இனிமையானவர்... எந்த ஒரு இன்டர்நெட் பிரச்சனையென்றாலும் அதற்கான தீர்வை தருவார். பொதுமக்களாகிய வாடியாக்கையாளகளிடம் அரசாங்க அதிகாரிகள் /அலுவலர்கள் எவ்வாறு நடந்த கொள்ள வேண்டும் என்பதற்க்கு இவர் நல்லதொரு உதாரணம் என்று நினைக்கின்றேன். பதவி உயர்வு பெற்றுள்ள ஜெயக்கொடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [27 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28999

அன்பு நண்பர் ஜெயக்கொடி அவர்கள் நமதூரின் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர், மக்கி நூஹுதம்பி மச்சான் அவர்கள் சொன்னது போல் தேனியை போன்று சுறு சுறுப்பானவர். இன்னும் மேன்மேலும் பதவி உயர்வுகள் பெற்று சீருடன் வாழ மனமுவந்து வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [27 July 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29000

திரு ஜெயக்கொடி அவர்களின் பதவி உயர்வு கேள்வி பட்டதும் மிகவும் சந்தோசம்.

நாங்கள் பல முறை அபுதாபில் இருந்து புகார் செய்தால் உடனே நிவர்த்தி செய்து விடுவார். அரசு அதிகாரிகளுக்கு இவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார், நான் பலமுறை அவரது அலைபேசிக்கு தான் தொடர்பு கொண்டு இருக்கிறேன். இதுவரை கோபம் பட்டதை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.

நமது இல்லங்களுக்கு தொலைபேசி இணைப்பு அல்லது இன்டர்நெட் இணைப்பு வேண்டும் என்று தொலைபேசி மூலமாக கூறினால் உடனே இணைப்பு கொடுத்து விடுவார்.

ஒரு நல்ல மனிதராக மொத்தத்தில் இருந்து வந்தார். மேலும் பல உயர் பதவிகளை பெற வாழ்த்துக்கள்

புதிதாக கூடுதல் பொறுப்பு ஏற்று இருக்கும் திரு.நம்பிராஜன் அவர்களையும் வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [27 July 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 29001

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>எங்களின் இனிய நல் வாழ்த்துக்கள் தங்களுக்கு <<<

நமது ஊரில் B.S.N.L.என்றாலே நம் பொது மக்களுக்கு உடனே யாபகத்துக்கு வருவது நமது சார். ஜெயக்கொடி அவர்களைத்தான் ...நமது ஊரில் B.S.N.L.முன்னுக்கு வந்தது என்றால் அது சார் ஜெயக்கொடி என்பதை யாருமே மறுக்கவும் ...மறக்கவும் மாட்டார்கள் .........அந்த அளவுக்கு ஜெயகொடி சாரின் நல்ல செயல் பாடுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது ....

ரொம்பவும் கண்ணியமும் / மரியாதையும் / மிகவும் தாழ்வானதோர் பேச்சின் மரியாதையும் .... சாரின் ரத்ததில் உரியது என்றே நாம் ஓவ்வொருவர்களும் கண் கூடாகவே கண்ணால் பார்த்ததே ..........

நம் மக்கள் தொலை தொடர்பில் ஒரு குறை என்று சொன்னால் போதும் ....அருமையான நல்ல பதில்வுடன் நம் இடத்துக்கே அவர்களின் டீம்யுடன் வந்து துரிதமாகவே செயல் பட்டு ...நம் குறைபாட்டை சரிசெய்து அவரின் புன்னகையான முகத்துடன் செல்வதை நாம் பார்க்கும் போது.....நம் யாவர்களும் மன திருப்தி அடைவோம் .........

நாங்கள் ஊரில் நம் வீட்டில் தொலை தொடர்ப்பு குறை என்று வெளி நாட்டில் இருந்து எந்த நேரத்திலும் சொன்னால் போதும். எந்த ஒரு மறுப்புமே சொல்லாது செயல்படுவார் .

நான் சாருடன் 10 வருடமாகவே நன்கு பழகி வருவதால் இவரின் இனிமையான நற்குணங்கள் நான் அறிந்ததே ..........

இவரை போன்று அருமை அண்ணன் நம்பி ராஜன் அவர்களையும் நாம் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்து உள்ளோம். நமது எண்ணம் நிச்சயமாகவே வினாகாது.

நமது >>B.S.N.L.<< நிர்வாகம்.... நேர்மை ...சுறுசுறுப்பு ..நல்ல செயல்ஆற்றல் ....வேலைகளை ரொம்பவும் மென்மையுடன் எடுத்து கொள்வது என்று அனைத்தும் ஒன்றே அமைந்த இவருக்கு இந்த பதவி உயர்வை எப்பவே கொடுத்து இருக்கவேணும். இருப்பின் இப்பவாது நமது B.S.N.L. நிர்வாகம் ஜெயக்கொடி சாருக்கு பதவி உயர்வு கொடுத்ததை நாம் நிர்வாகத்தையும் மனதார பாரட்டுவோம்......

வல்ல இறைவன் அருளால் நமது ஜெயக்கொடி சார் மேலும் பல பதவி உயர்வு பெற்று சிறப்பு பெற வாழ்த்துகிறோம்........... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...jayakudy
posted by hylee (kayalpattinam) [27 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29002

இன்டர்நெட் வேகத்தை விட,வேகமாக சேவை புரிந்த நல்ல மனிதர் ,பண்பாளர் மேலும் வெற்றி பல பெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by MARZOOK.T.M.R. (KAYALPATNAM) [27 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29003

என் அன்பு நண்பருக்கு என் நல்வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [27 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29004

வாழ்த்துக்கள்.

Moderator: தெளிவற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ஜெயக்கொடி அவர்களுக்கு ஓர் சல்யூட்...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [28 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29006

மிக நேர்மையான அதிகாரி திரு,ஜெயக்கொடி அவர்கள். தொலைபேசி, இண்டர்நெட் சம்பந்தமாக என்ன தேவையானாலும் உடனே இன்முகத்தோடு பதில் தந்து கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித்தருவதில் வல்லவர்.

பலமுறை நான் அவரை சில தேவைகளுக்காக நேரில் சந்தித்திருக்கின்றேன். ஒரு முறை நான் அவரது அலுவலகத்திற்குச் சென்ற போது டெக்கனிக்கல் ரூமில் பிஸியாக இருந்தார். தகவல் கூறியதும் உளே வந்த அவர் கஸ்டமர் வந்தால் உடனே ஃபேன் போட வேண்டியதுதானே எனக் கூறி, அவரே சுவிட்சை போட்டு மின்விசிறியை சுழலவிட்டார்.

கனிவோடு நமது கோரிக்கைகளைக் கேட்டு அதற்கான சுலப வழிகளையும் கூறுவார். இனி அவர் பணியாற்றும் இடங்களிலும் தனது தனிதன்மையைக் கடைபிடித்து மக்களை வென்றெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற கடமை தவறாத அதிகாரிகள் இருப்பது அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.

புதிதாக பொறுப்பேற்ற அதிகாரியும் மக்கள் தேவைகளை மனதில் கொண்டு பணியாற்ற வாழ்த்துக்கள்.

-ஹிஜாஸ் மைந்தன்.
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி!
posted by S.K.Salih (Kayalpatnam) [28 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29007

பழகிய யாராலும் எளிதில் மறக்கவியலாத ஓர் ஆத்மாதான் ஜெயக்கொடி சார் அவர்கள்.

தொலைதொடர்புச் சேவையில் அவரது இன்முகத்துடன் கூடிய வேகமான செயல்பாடுகள் குறித்து இச்செய்தியின் கீழ் பலரும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். அவற்றையே நானும் வழிமொழிகிறேன்.

பொதுவாக, அரசு அலுவலகங்கள் என்றாலே அங்கே சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமேயிருக்காது. ஆனால், “டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் பிரச்சினையாம்” என்று யாரும் கூற இதுவரை நான் கேள்வியுற்றதில்லை.

திரு. நம்பிராஜன் சார் அவர்களும் ஜெயக்கொடி சார் அவர்களைப் போலவே இன்முகத்துடன் பணியாற்றியவர் என்றாலும், மக்கள் தொடர்பு பெரும்பாலும் ஜெயக்கொடி சார் அவர்கள் வசமே இருந்த காரணத்தால், நம்பிராஜன் சார் அவர்களின் நற்குணம் இதுவரை வெளியில் முழுமையாகத் தெரியாதிருந்தது. இனி அதுவும் தெரிய வரும்.

நம்பிராஜன் சார் அவர்கள் இன்னும் ஈராண்டுகளில் பணி நிறைவு வயதையடையவுள்ளார்கள். அவர்களது குறைவில்லா சேவைகள் இறுதி வரை திறம்பட தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.

ஜெயக்கொடி சார்...! தங்களுக்கு பதவி உயர்வு என்றவுடன் - அது தங்களுக்கு மகிழ்ச்சி என்ற ஒரே காரணத்திற்காகவே நானும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். மற்றபடி, எங்கள் ஊர் அலுவலகத்திலிருந்து நீங்கள் பிரிந்து வேறிடம் செல்வதை ஏனோ எங்கள் மனம் ஏற்க மறுக்கிறது. அதற்காக.......? தங்களுக்கு வயதோ 45. இன்னும் பல ஆண்டுகள் பணியாற்ற வயதுள்ளவர்கள் தாங்கள்.

தங்கள் இன்முகச் சேவைக்கு பலனாக இன்னும் பல பதவி உயர்வுகள் தங்களைத் தேடி வர வேண்டும். தேசிய அளவில் மிகப்பெரும் பொறுப்பு வரை தாங்கள் உயர வேண்டும். உங்கள் வளர்ச்சியை நமதூர் மக்கள் தலை உயர்த்திப் பார்க்க வேண்டும்.

அதற்கு எல்லாம்வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம் ஆகியவற்றைத் தந்தருள்வானாக...

ஒரு சின்ன ஆசை...! தாங்கள் இப்போது பெற்றிருக்கும் புதிய பொறுப்பிற்கும், காயல்பட்டினம் தொலைதொடர்பு நிலையத்திலேயே பணியிடம் விரைவில் அமையப்பெற்று, பெற்ற பதவி உயர்வுடனேயே மீண்டும் நமதூரில் தாங்கள் பணி செய்தால்.............???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [28 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29014

**************************************
* இது என்னுடைய 1000 ஆவது கமெண்ட்ஸ் *
***************************************

உயர் திரு ஜெயக்கொடி அவர்களின் பதவி உயர்வை அறிந்து சந்தோசத்துடன் கூடிய கவலை உண்டானது. அவர்கள் வாழ்வில் பல உயர்வுகளை அடையும் செய்தி சந்தோசத்தையும், காயலை விட்டு ஒரு நல்ல அதிகாரி செல்லுகின்றாரே என்ற கவலையும் ஒருசேர வருகின்றது.

பல பல வருடங்களுக்கு முன்பு, இன்டர்நெட் வேலை செய்யவில்லை என்று மனைவியிடம் வினவியதும், எஞ்சினியர் ஜெயக்கொடி அவர்களுக்கு போன் போடுங்கோ என்று ஒரு நம்பரை தந்தார்கள். பெயரை பார்த்ததும் ஒரு பெண்மணி தான் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் அழைத்தேன், வந்த குரலோ ஆண் குரல்.

விசாரித்தார், ஆள் அனுப்புவதாக சொன்னார், சரி ஆள் வர எப்படியும் நாட்கள் ஆகும் (அரசாங்க வேலை என்றால் இது தானே எதார்த்தம்) என்று வெளியில் செல்ல பைக்கை எடுக்க சென்றேன், வீட்டின் அழைப்பு மணி அடித்தது, வெளியில் BSNL ஆள். என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொண்டேன்.

மனைவியிடம் விவரித்தேன் இந்த அதிசயத்தை. அம்மணியோ கூலாக ஜெயக்கொடி ஐயாவிடம் (இந்த ஐயா என்பதை முன்பே கூறி இருந்தால் ஒரு எதிர்பார்ப்பு மிச்சமாகி இருக்கும்) ஒரு போன் பண்ணினால், அனைத்தும் உடனடியாக தீர்க்கப்படும் என்றார்கள், நம்பிக்கையுடன். சபாஸ்..சபாஸ். இந்த மாதிரியான நம்பிக்கை அனைத்து துறைகளிலும் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

ஜெயக்கொடி ஐயா அவர்கள் தன் வாழ்வில் அனைத்து உயர்வுகளையும் பெற்று, நிம்மதியான வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்.

ஐயா நம்பி ராஜன் அவர்களும் மக்களின் மனதில் இடம்பிடிக்க வாழ்த்துகின்றேன்.

- இன்டர்நெட் என்ன பிரச்சனை என்கின்றீர்களா? அதான் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை, காக்கை டெலிபோன் வயரில் உட்கார, இன்டர்நெட் டவுன் ஆனா கதையாக மாறி விட்டது.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்

[Administrator: ஆயிரம் கமெண்டுகள் கண்ட சாளை ஜியாவுதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கலந்த நன்றி :-) ]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by fathima ahmed (kayal) [28 July 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29016

மிக நேர்மையான அதிகாரி திரு,ஜெயக்கொடி அவர்கள்.

தொலைபேசி, இண்டர்நெட் சம்பந்தமாக என்ன தேவையானாலும் உடனே இன்முகத்தோடு பதில் தந்து கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித்தருவதில் வல்லவர். வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...Congradulations
posted by Sulaiman (Chennai) [30 July 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 29091

Greetings.....

I convey my heartiest greetings to Mr.Jeyakodi for getting promotion In the Telecom Sector. He is a very nice person and he always smiles towards the people who come and meet him for telephone related complaints or needs. He has got the reward for his sincere and hardworking in his profession. Once again i congradulate him to perform continuos achievements in his career.

With Best Regards,
Sulaiman
Senior Software Testing Engineer,
Openwave Computing Services (p) Ltd.,
Chennai.
Mobile : 8056157422


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved