ஐக்கிய அரபு அமீரகம் - துபை நகரில் பணியாற்றி வந்த - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த (தற்போதைய முகவரி - ஜீலானி நகர்) எம்.எஸ்.எல்.ஜாமிஉல் அக்பர் இம்மாதம் 24ஆம் தேதி (அமீரக நேரப் படி) மாலை 04.30 மணியளவில் துபை - அல்பராஹாவிலுள்ள துபை மருத்துவமனையில் காலமானார்.
அந்நாட்டு சட்ட விதிகளின்படி, பதிவுப்பணிகள் நிறைவுற்றுள்ளதையடுத்து, இன்று (ஜூலை 28) ஞாயிற்றுக்கிழமை மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், அவரது ஜனாஸா - துபை அல்கூஸ் (Al Quoz) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
2. Re:... posted byமுத்துவாப்பா (al khobar)[28 July 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29021
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல நாயன் இந்த புனித ரமழான் மாதத்தின் அருளால் ஜாமில் அப்பா அவர்களின் பிழைகளை பொறுத்து, மேலான சுவன பதிதனை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .
வபாத் ஆகி ஐந்து நாட்கள் கழித்து அடக்கம் என்பதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாகவும் , இந்த வெளிநாட்டு வாழ்க்கையை நினைத்து வேதனையாகவும் உள்ளது .
5. Re:... posted byO.A.NAZEER AHMED (chennai)[28 July 2013] IP: 106.*.*.* India | Comment Reference Number: 29025
இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.. அனைவரிடமும் anbaha பலஹகூடியவர் ஜமியுல் அக்பர்..அவர் மறைந்த seityhy அறிந்து மித மனவேதனை..அவரை பார்த்து நீண்ட நாட்கலஹிவிட்டது..சிறப்பான மாதத்தில் மறைந்டுல்லாவருடைய பிழை பாவங்களை இறைவன் மன்னித்து சுவர்கபதியை வழங்குவனஹா அமீன்..அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்..
யா அல்லாஹ் இந்த புனித ரமழான் மாதத்தின் அருளால் ஜாமில் மாமா அவர்களின் பிழைகளை பொறுத்து, மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதவி கொடுத்து அருள்வானாக . ஆமீன் .குடும்பத்தார்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் .
மருமகன் . ஆசிக் ரஹ்மான் ..எம் .எச் மிக்வா via அல் பாஹ கே .எஸ் .ஏ
7. Re:...யார் அழைத்தாலும்.... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 July 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29031
யார் அழைத்தாலும் சென்று விடுவாயே நண்பா! அழைத்தது யமன் என்று தெரிந்துமா அவனிடம் சென்றாய் நண்பா! என்று ஒரு கவிஞர் அவரது நண்பனின் மறைவுக்கு இரங்கல் பா பாடினார்.
அத்தகைய உயர்ந்த குணம் படைத்த, யார் கூப்பிட்டாலும் ஓடி சென்று உதவிகள் புரியும் நல்ல இதயம் படைத்தவர் நம்மை விட்டு திடீரென பிரிந்து விட்டது மனதுக்கு கவலை தந்தாலும் நம்மை எல்லாம் படைத்த இறைவன் அவனது ஆணைக்குள் நம்மை கட்டி போட்டுள்ளான்.
எனவே மர்ஹூம் அவர்களுக்கு அல்லாஹ் மேலான சுவர்க்க பதவியை கொடுக்க வேண்டும் என்று இந்த நல்ல நாட்களில் அவனிடம் பிரார்த்திப்போம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையாக இருக்கும்படி சொல்லி அப்படி இருப்பவர்களுக்கு, அவனது மேலான சலவாத்தும் ரஹ்மத்தும தருவதாக வாக்களித்துள்ளான்.
எனவே பொறுமையாக இருந்து விழி நீர் துடைத்து இனி ஆக வேண்டியதை கவனியுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். உங்கள் கவலைகளில் நானும் பங்கு கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross