தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 01ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும்
கிறிஸ்துவர் / இஸ்லாமியர் / புத்த மதத்தினர் / சீக்கியர் மற்றும் பார்ஸி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு பள்ளிப்படிப்பு கல்வி
உதவித்தொகை (Prematric Scholarship) திட்டத்தின் கீழ் 2013-14ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற,
>> மாணவ-மாணவியரின் பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
>> மாணவ-மாணவியர், முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 விழுக்காடு மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்று தேர்ச்சி
பெற்றிருத்தல் வேண்டும்.
>> பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை / ஆதி திராவிடர் நலத்துறை / மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2013-14ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகை
பெறுதல் கூடாது.
>> குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டுமே இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
>> குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவ-மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
>> மாணவ-மாணவியர், புதியது (Fresh) (ம) புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை, www.tn.gov.in/bcmw/welfshemes_minorities.htm என்ற
இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து, தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
>> விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.08.2013.
>> கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து, அதற்கான கேட்புப் பட்டியலை உரிய படிவத்தில் பதிந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் 22.08.2013 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய விண்ணப்பங்கள் படிவம் ...
புதுப்பித்தல் விண்ணப்ப படிவம் ...
இவ்வாண்டு இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு வகுத்துள்ள கால அட்டவணை ...
இந்த திட்டத்திற்கான நிதியினை மத்திய அரசும், மாநில அரசும் 75% - 25% அளவீட்டில் வழங்குகின்றன. மேலும் இவ்வாண்டிற்கான தமிழ் நாட்டிற்கு - மத ரீதியான
இலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் - 73,200
கிருஸ்தவர்கள் - 79,800
சீக்கியர்கள் - 200
பௌத்தர்கள் - 200
பார்சி இனத்தவர்கள் - 18
மொத்தம் - 153,416
இந்த திட்டம் 2008 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. கடந்த ஆண்டுகள் இத்திட்டம் மூலம் பயனடைந்தோர் விபரம் வருமாறு:
2008 - 2009
முஸ்லிம்கள்
--- இலக்கு - 5,490
--- அடைந்தது - 11,547
கிருஸ்தவர்கள்
--- இலக்கு - 5,985
--- அடைந்தது - 12,588
சீக்கியர்கள்
--- இலக்கு - 15
--- அடைந்தது - 0
பௌத்தர்கள்
--- இலக்கு - 15
--- அடைந்தது - 0
பார்சி இனத்தவர்கள்
--- இலக்கு - 1
--- அடைந்தது - 0
மொத்தம்
--- இலக்கு - 11,506
--- அடைந்தது - 24,135
ஆண்கள் - 9,374
பெண்கள் - 14,761
பெண்கள் சதவீதம் - 61.16
நிதி ஒதுக்கீடு - 2.33 கோடி ரூபாய்
2009 - 2010
முஸ்லிம்கள்
--- இலக்கு - 27,450
--- அடைந்தது - 40,260
கிருஸ்தவர்கள்
--- இலக்கு - 29,925
--- அடைந்தது - 43,890
சீக்கியர்கள்
--- இலக்கு - 75
--- அடைந்தது - 0
பௌத்தர்கள்
--- இலக்கு - 75
--- அடைந்தது - 0
பார்சி இனத்தவர்கள்
--- இலக்கு - 7
--- அடைந்தது - 0
மொத்தம்
--- இலக்கு - 57,532
--- அடைந்தது - 84,150
ஆண்கள் - 36,477
பெண்கள் - 47,673
பெண்கள் சதவீதம் - 56.65
நிதி ஒதுக்கீடு - 7.82 கோடி ரூபாய்
2010 - 2011
முஸ்லிம்கள்
--- இலக்கு - 36,600
--- அடைந்தது - 166,656
கிருஸ்தவர்கள்
--- இலக்கு - 39,900
--- அடைந்தது - 145,756
சீக்கியர்கள்
--- இலக்கு - 100
--- அடைந்தது - 1
பௌத்தர்கள்
--- இலக்கு - 100
--- அடைந்தது - 2
பார்சி இனத்தவர்கள்
--- இலக்கு - 9
--- அடைந்தது - 0
மொத்தம்
--- இலக்கு - 76,709
--- அடைந்தது - 312,415
ஆண்கள் - 118,674
பெண்கள் - 193,741
பெண்கள் சதவீதம் - 62.01
நிதி ஒதுக்கீடு - 28.17 கோடி ரூபாய்
2011 - 2012
முஸ்லிம்கள்
--- இலக்கு - 62,221
--- அடைந்தது - 160,251
கிருஸ்தவர்கள்
--- இலக்கு - 67,831
--- அடைந்தது - 140,995
சீக்கியர்கள்
--- இலக்கு - 170
--- அடைந்தது - 10
பௌத்தர்கள்
--- இலக்கு - 170
--- அடைந்தது - 22
பார்சி இனத்தவர்கள்
--- இலக்கு - 15
--- அடைந்தது - 0
மொத்தம்
--- இலக்கு - 130,407
--- அடைந்தது - 301,278
ஆண்கள் - 139,708
பெண்கள் - 161,570
பெண்கள் சதவீதம் - 53.63
நிதி ஒதுக்கீடு - 32.28 கோடி ரூபாய்
2012 - 2013
முஸ்லிம்கள்
--- இலக்கு - 73,200
--- அடைந்தது - 174,599
கிருஸ்தவர்கள்
--- இலக்கு - 79,800
--- அடைந்தது - 166,088
சீக்கியர்கள்
--- இலக்கு - 200
--- அடைந்தது - 0
பௌத்தர்கள்
--- இலக்கு - 200
--- அடைந்தது - 0
பார்சி இனத்தவர்கள்
--- இலக்கு - 18
--- அடைந்தது - 0
மொத்தம்
--- இலக்கு - 153,418
--- அடைந்தது - 340,647
ஆண்கள் - 156,749
பெண்கள் - 183,898
பெண்கள் சதவீதம் - 53.98
நிதி ஒதுக்கீடு - 36.30 கோடி ரூபாய்
தகவல் உதவி:
சொளுக்கு முஹம்மது நூஹ் MAC,
காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC),
சென்னை.
|