தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி பிரிவு சார்பில் 2013-2014ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான மாற்றுத் திறனுடையோருக்கான விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடியிலுள்ள எஸ்.டி.ஏ.டி. மாவட்ட விளையாட்டு அரங்கில், இன்று காலை 10.00 மணியளவில் துவங்கியது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
இதில் பின்வருமாறு பல்வேறு பள்ளிகளிலிருந்து மொத்தம் 261 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அதன் விவரம்:-
இதில், கபாடி, எறிபந்து, மேஜைபந்து, வாலிபால், இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. அதில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அனைவருக்கும் அரசின் சார்பில் பதக்கங்களும், சான்றிதழ்களும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்படும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் டி-சர்ட்களை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வழங்குகிறது.
இன்று மாலை 03.00 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில், மண்டல முதுநிலை மேலாளர் பா.ஷாஜு தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பொது மேலாளர் எஸ்.செல்வன் ராஜதுரை வீரர்-வீராங்கனைகளுக்கு டி-சர்ட் மற்றும் பதக்கங்கள் வழங்குகிறார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.க.செயக்கண்ணு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்குகிறார்.
இத்தகவலை, மாவட்ட விளையாட்டு அலுவலர் க.சேவியர் ஜோதி சற்குணம் தெரிவித்துள்ளார். |