தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதையொட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் "தூத்துக்குடி திருவிழா" என்ற நிகழ்ச்சி ஜூலை 27, 28-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியை கோஸ்டல் எனர்ஜன் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அகமது புகாரி திறந்து வைத்தார். கண்காட்சி வளாகத்தில் தூத்துக்குடி நகரில் உற்பத்தியாகும் பொருட்கள் உட்பட இதர தொழில்நிறுவனங்களின் 31 அரங்குகள் அமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கண்காட்சியில் - Agsar Paints, Tamil Nadu Mercantile Bank, AVM Group of Company, Coastal Energen, Sterlite, DCW, Diamond Sea Foods, Venus Home Appliances Limited, VOC Chidambaranar Port Trust, Dakshin Bharat Gateway Terminal Private Limited, Tuticorin Coal Terminal Private Limited உட்பட பல நிறுவனங்களின் அரங்குகள் காண முடிந்தது.
தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் அரங்கில் - காயல்பட்டினம் மஹ்லரா கட்டிட புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
27-ந் தேதி மாலை 6-30 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் ரெயின்ட்ரீ ஓட்டலில் தூத்துக்குடியில் உள்ள தொழில் மற்றும் முதலீடு சார்ந்த நிறுவனங்களில் உள்ள வாய்ப்புகளை, சென்னை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. கருத்தரங்கை மத்திய கப்பல்துறை மந்திரி ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது புகாரி, டிஎம்பியின் மேலாண்மை இயக்குனர் நாகேந்திர மூர்த்தி, வஉசி துறைமுக சபை தவைர் நடராஜன், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராமநாத் ஆகியோர் பேசினர்.
அரங்குகள் ...
பொருட்கள் ...
தூத்துக்குடி தொழில் வர்த்தக சங்க தலைவர் பி.எஸ்.எஸ்.கே.ராஜா சங்கரலிங்கம் - தூத்துக்குடி துறைமுகம் சார்ந்த பகுதி. பல்வேறு தொழில் வாய்ப்புகள் நிறைந்த பகுதி. இந்த பகுதிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தூத்துக் குடியின் பெருமைகளை வெளியுலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் இக்கண்காட்சியை சென்னையில் 2 நாட்கள் நடத்துகிறோம் என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:
தூத்துக்குடி துறைமுகத்துக்கு ரயில், பஸ், விமானம், கப்பல் போன்ற அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. மின் உற்பத்தி நிலையம், உர தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் உள்ளன.
சிறந்த வர்த்தக மையமாக விளங்குவதற்கு வஉசி துறைமுகம் முக்கிய காரணமாக உள்ளது. நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி 75 சதவீதம் கடல்வழியாக நடக்கிறது. இந்தியாவில் துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் 2012 மார்ச் இறுதியில் 1200 மி.மெட்ரிக் டன்னாக இருந்தது. 2013 மார்ச்சில் 1,345 மி.மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் 28 மி.மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டது.
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கப்பல் போக்குவரத்து கழகம் வஉசி துறைமுகத்துடன் இணைந்து தூத்துக்குடியில் கடல்சார் பயிற்சி மையம் தொடங்குகிறது. இந்த பயிற்சி மையத்தின் உள்கட்டமைப்புக்காக ரூ.15 கோடியை கப்பல்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முதல்கட்டமாக தமிழகத்தை சேர்ந்த 40 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
தகவலில் உதவி:
www.tutyonline.com
புகைப்படங்களில் உதவி:
எஸ்.எம்.ஐ.ஜக்கரிய்யா, சென்னை. |