அமைவிடம்:
காயல்பட்டினம் கீழ நெய்னார் தெரு, கற்புடையார் பள்ளி வட்டம் ஆகிய பகுதிகளை அணைத்தாற்போல் அமைந்துள்ளது மஸ்ஜிதுல் ஈமான் எனும் கற்புடையார் பள்ளியும், அதனையொட்டி அமைந்துள்ள ஹழ்ரத் செய்யித் அபூபக்கர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, கதீஜா உம்மாள் ரஹ்மத்துல்லாஹி அலைஹா ஆகியோரின் தர்ஹாவும்.
வரலாறு:
காயல்பட்டினத்தின் முதல் பள்ளியாக இது இருக்கலாம் என்றும், ஹிஜ்ரீ 0009ஆம் ஆண்டில் நபித்தோழர்களால் கட்டப்பட்டதாகவும் கருதப்படும் இப்பள்ளியைச் சுற்றி, குடியிருப்புகள் இல்லாதிருந்தமையால் நாளடைவில் பள்ளிவாசல் செயலிழந்து போனது. எனினும், தர்ஹாவில் பெரும்பாலும் ஆண்டுதோறும் கந்தூரி நிகழ்ச்சிகள் மட்டும் தவறாமல் நடத்தப்பட்டு வந்தது.
புதுப்பிப்பு:
இந்நிலையில், கீழ நெய்னார் தெரு, கற்புடையார் பள்ளி வட்டம் பகுதிகளில் தற்காலத்தில் குடியிருப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியில் பள்ளிவாசலின் அவசியம் உணரப்பட்டது. அதனைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து - உட்பள்ளியில் சுமார் 45 பேரும், வெளிப்பள்ளியில் சுமார் 80 பேரும் தொழும் வகையில் பள்ளிவாசல், உளூ (சுத்தம் செய்யுமிடம்), கழிப்பறை ஆகியவற்றை உள்ளடக்கி மஸ்ஜிதுல் ஈமான் பள்ளிவாசலை மீண்டும் புதுப்பித்துக் கட்டி முடித்துள்ளனர்.
திறப்பு விழா:
ஹிஜ்ரீ 1434 - ஜமாதியுல் ஆகிர் 26ஆம் நாள் (06.05.2013) திங்கள் பின்னிரவில் மஃரிப் தொழுகையுடன் - புதுப்பித்துக் கட்டப்பட்ட பள்ளி திறப்பு விழா, மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ பள்ளியின் சரித்திர சுருக்கவுரையும் நிகழ்த்தினார்.
நிர்வாகம்:
இப்பள்ளியில்,
ஹாஜி ஏ.கே.ஷம்சுத்தீன் தலைவராகவும்,
ஹாஜி பிரபு செய்யித் முஹம்மத் செயலாளராகவும்,
ஹாஜி எம்.கே.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ பொருளாளராகவும்,
ஹாஜி முஹம்மத் முஹ்யித்தீன் என்ற ‘லேண்ட் மம்மி’,
எஸ்.ஏ.உமர் ஸாஹிப்,
பாளையம் அப்துர்ரஹ்மான்,
ஃபஸ்லுல் ஹக்,
ஹாஜி எம்.எம்.அஜீஸ்,
எஸ்.ஏ.தவ்ஹீத்,
ஹாஜி ஏ.கே.பாதுல் அஸ்ஹப்
ஹாஜி மர்ஸூக்
உள்ளிட்டோர் நிர்வாகக் குழுவினராகவும் இருந்து சேவையாற்றி வருகின்றனர்.
பணியாளர்:
பள்ளியின் இமாம் - பிலால் பொறுப்புகளை, அரபி முஹம்மத் முஹ்யித்தீன் கவனித்து வருகிறார்.
வழமைச் செயல்பாடுகள்:
நாள்தோறும் ஐவேளைத் தொழுகை, வழமையான மவ்லித் மஜ்லிஸ்கள் நடைபெறும் இப்பள்ளிக்கு இதுவே துவக்க ஆண்டு என்பதால், நடப்பாண்டு முதல், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, தராவீஹ் தொழுகை உள்ளிட்ட ரமழான் சிறப்பேற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள்:
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்காக இப்பள்ளியிலேயே நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு வருகிறது.
இஃப்தார் நிகழ்ச்சியில் 20 முதல் 30 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுள் பெரும்பாலோர் மாணவர்கள். அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கறிகஞ்சி, வடை வகைகள், அவ்வப்போது கட்லெட் வகைகள், அவ்வப்போது குளிர்பான வகைகள் பரிமாறப்பட்டு வருகிறது.
30 நாட்களுக்கான மொத்த செலவினத்திற்கும், இப்பள்ளி நிர்வாகக் குழுவைச் சேர்ந்த இருவர் மட்டுமே முழு அனுசரணையளித்து வருகின்றனர். துவக்க ஆண்டு என்பதால், ஊற்றுக்கஞ்சி வினியோகம் செய்யப்படவில்லை.
இஃப்தார் - நோன்பு துறப்புக் காட்சிகள்:
இம்மாதம் 20ஆம் தேதியன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்புக் காட்சிகள் வருமாறு:-
தகவல் உதவி:
ஃபஸ்லுல் ஹக்
[செய்தி திருத்தப்பட்டது @ 02:48 / 03.08.2013] |