சிங்கப்பூர் வாழ் காயலர்கள் சார்பில், நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு தராவீஹ் தொழுகை, கியாமுல் லைல், ஸஹர் விருந்து, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களும், சிறப்பழைப்பாளர்களும் பங்கேற்றனர். விபரம் வருமாறு:-
தராவீஹ் தொழுகை:
நடப்பாண்டு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் காயலர்கள் சார்பில், ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் நாள்தோறும் தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இத்தொழுகையை, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள - மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்களான
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்,
ஹாஃபிழ் தைக்கா ஸாஹிப்,
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத்,
ஹாஃபிழ் சாவன்னா ஷாஹுல் ஹமீத்,
ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல்,
ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஸூஃபீ,
ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூன்
ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்.
நாள்தோறும் இஷா தொழுகை இரவு 20.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.00 மணிக்கும் நடத்தப்படுகிறது.
கியாமுல் லைல்:
கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை - இம்மாதம் 27ஆம் தேதி இரவு 00.00 மணியளவில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்,
ஹாஃபிழ் தைக்கா ஸாஹிப்,
ஹாஃபிழ் செய்யித் அஹ்மத்,
ஹாஃபிழ் சாவன்னா ஷாஹுல் ஹமீத்
ஆகியோரிணைந்து இத்தொழுகையை வழிநடத்தினர்.
தஸ்பீஹ் - வித்ர் தொழுகை:
அதனைத் தொடர்ந்து ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வழிநடத்தலில் தஸ்பீஹ் தொழுகையும், ஹாஃபிழ் தைக்கா ஸாஹிப் வழிநடத்தலில் வித்ர் தொழுகையும் ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
கத்முல் குர்ஆன்:
அதனைத் தொடர்ந்து, கத்முல் குர்ஆன் ஓதப்பட்டது. பின்னர், சிறப்பழைப்பாளர்கள் துஆ இறைஞ்சினர்.
சிறப்பு சொற்பொழிவு:
அதனைத் தொடர்ந்து, “மனிதனிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள்” எனும் தலைப்பில், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காஜா முஹ்யித்தீன் பாக்கவீ உரையாற்றினார்.
ஸஹர் உணவு விருந்துபசரிப்பு:
நிறைவாக, காயல்பட்டினம் பாரம்பரிய முறையில் சுவை - மணத்துடன் சமைக்கப்பட்ட களறி சாப்பாடு ஸஹர் உணவாக அனைவருக்கும் விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
மறுநாள் மாலையில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி அதே இடத்தில் நடைபெற்றது. அதிலும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறி கஞ்சி, பழ வகைகள், குளிர்பான வகைகள், வடை வகைகள், புரோட்டா - கறி, தேனீர் என பல்வகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் காயலர்களால் நடத்தப்பட்ட ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.A.C.செய்யித் இஸ்மாஈல்
[செய்தி திருத்தப்பட்டது @ 20:14 / 31.07.2013] |