காயல்பட்டினம் அருகே மீனவரை வெட்டிக் கொன்று அவரது உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கொம்புத்துறையை சேர்ந்தவர் ஆன்ட்ரூஸ் (55). மீனவரான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை கடலுக்கு சென்றார், பின்னர் மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இரவு முழுவதும் அவரது உறவினர்கள் தேடிபார்த்துள்ளனர். இந்நிலையில், காயல்பட்டினம் கணேஷ்நகர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஆன்ட்ரூஸ் தலையில் 3 இடங்களில் பலத்த அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1. குற்றவாளி கண்டுப்பிடிக்க பட வேண்டும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[01 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29142
நகரில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது வேதனைக்குரியது...! உடனே காவல்துறை குற்றவாளிகளை கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross