கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள அல்பாக்கவீ அறக்கட்டளை சார்பில் “அல்குர்ஆன் வினா-விடை போட்டி” நடத்தப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:-
அல்குர்ஆன் வினா-விடை போட்டி
“இது உலகோர் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமாகும். (அல்குர்ஆன் 6;90)
உலகில் நடைபெறும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அறிவியல் ரீதியாக விளக்கமளிக்கிறது அல்குர்ஆன். மகத்துவம் வாய்ந்த அல்குர்ஆனில் கூறப்பட்ட அனைத்து விஷயங்களையும் நாமும் பொருளறிந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில், அல்பாக்கவீ அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் வினா-விடை போட்டி நடத்தப்படுகிறது.
>> இதில் பங்குபெறுவதற்கு, கட்டணம் எதுவுமில்லை.
>> உங்கள் பெயரைப் பதிவு செய்தாலே போதுமானது.
உங்களுக்கு அனுப்பப்படும் வினாக்களுக்குரிய விடைகள் - அவர்கள் குறிப்பிட்டுள்ள - திருக்குர்ஆனின் சில வசனங்களில் இடம்பெற்றிருக்கும். அவ்வசனங்களைக் கூர்ந்து படித்தால் அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைக்கும். அப்படி கிடைக்கின்ற சரியான விடைகளைப் பூர்த்தி செய்து, உங்கள் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
அதிகப்படியானோர் சரியான விடையளித்திருக்கும்பட்சத்தில், குலுக்கல் முறையில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி வாய்ந்த பரிசுகள் காத்திருக்கின்றன. பயன் மிகுந்த இந்தத் தேடல் போட்டியில், ஆண் - பெண் அனைவரும் பங்குபெற்று, இறையருள் பெற வேண்டுகிறோம்.
மேலும் விபரங்களுக்கு www.albaqavi.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தொடர்புக்கு:
அஃப்ஸலுல் உலமா
டாக்டர் அஹ்மத் பாக்கவீ எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.,
அல்பாக்கவீ அறக்கட்டளை
1230, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 003
உள்ளூர் (காயல்பட்டினம்) தொடர்புக்கு:
எல்.டி.இப்றாஹீம்
கைபேசி எண்: 91 96005 04234
மாதிரி வினாத்தாள் வருமாறு:-
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
L.T.இப்றாஹீம் |