ஷவ்வால் (1434) மாத அமாவாசை ஆகஸ்ட் 6 செவ்வாய்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி இரவு 9:50 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம்
ஆகஸ்ட் 7 அதிகாலை 3:20 மணி.
ஆகஸ்ட் 6 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:37 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:08. அன்று காயல்பட்டணத்தில் சூரியன்
மறைந்தப்பின்னரே அமாவாசை நிகழ்கிறது. மேலும் அன்று உலகின் எந்தப்பகுதியிலும் வெறுங்கண்கள் கொண்டு பிறையை காண இயலாது.
ஆகஸ்ட் 7 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:37 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:50. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 15
மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 13 நிமிடம் பிறை இருந்தாலும் - அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காண முடியாது.
பசிபிக் கடல் பகுதியிலும், தென் அமெரிக்காவின் அநேக பகுதிகளில் வெறுங்கண்கொண்டும், தென் அமெரிக்காவின் இதர பகுதிகளில் மற்றும் தென் ஆப்ரிக்காவின் தென் கோடி பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தாலும், மத்திய அமெரிக்கா, மத்திய மற்றும் தெற்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலும் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.
ஆகஸ்ட் 8 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:37 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:33. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 39
மணி நேரம். அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு எளிதாக காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ள ஒரு சாராருக்கு (Hijra Committee, Kerala) ஆகஸ்ட் 7 - ஷவ்வால் 1 ஆகும். மற்றொரு சாராருக்கு (Islamic
Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA], European Council for Fatwa and Research [ECFR], Conseil Français du Culte Musulman) ஆகஸ்ட் 8 - ஷவ்வால் 1
ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஆகஸ்ட் 6 (அமாவாசை) அன்று ரமழான் 28 பூர்த்தி ஆகிறது.
ஆகஸ்ட் 7 அன்று பசிபிக் கடல் பகுதியிலும், தென் அமெரிக்காவின் அநேக பகுதிகளில் வெறுங்கண்கொண்டும், தென் அமெரிக்காவின் இதர பகுதிகளில் மற்றும் தென் ஆப்ரிக்காவின் தென் கோடி பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தாலும், மத்திய அமெரிக்கா, மத்திய மற்றும் தெற்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலும் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.
அப்பகுதிகளில் ஆகஸ்ட் 7 அன்று பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றால்
- அவர்கள் ரமழான் 29 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 8 (ஷவ்வால் 1) அன்று பெருநாள் கொண்டாடுவர். அவ்வாறு தகவல் கிடைக்கப்பெறவில்லை எனில் அவர்கள் -
ஆகஸ்ட் 8 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 9 (ஷவ்வால் 1) அன்று பெருநாள் கொண்டாடுவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 6 (அமாவாசை) அன்று ரமழான் 27 பூர்த்தி ஆகிறது. ஆகஸ்ட் 6
மற்றும் ஆகஸ்ட் 7 அன்று காயல்பட்டினத்தில் பிறையை காண இயலாது. ஆகஸ்ட் 8 அன்று அவர்கள் ரமழான் 29 பூர்த்தி செய்வர். அன்று மாலை
காயல்பட்டினத்தில் எளிதாக பிறையை காணலாம். ஆகவே ஆகஸ்ட் 9 (ஷவ்வால் 1) அன்று அவர்கள் பெருநாள் கொண்டாடுவர். வானிலை சூழல் காரணமாக அன்று
பிறை தென்படவில்லை எனில் - ஆகஸ்ட் 9 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 10 (ஷவ்வால் 1) அன்று அவர்கள் பெருநாள் கொண்டாடுவர். |