Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:59:18 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11458
#KOTW11458
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 2, 2013
ரமழான் 1434: இரட்டை குளத்துப் பள்ளியின் கஞ்சி வினியோகம், இஃப்தார் காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3183 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சதுக்கைத் தெருவின் வடமுனையில் அமைந்துள்ளது மஸ்ஜித் மீக்காஈல் எனும் இரட்டை குளத்துப் பள்ளி (இர.கு.ப.).





நிர்வாகம்:

இப்பள்ளிவாசலில், ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) தலைவராகவும், ஹாஜி எஸ்.ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி செயலாளராகவும், ஹாஜி பி.எஸ்.ஏ.மரைக்கார் ஸாஹிப் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றனர்.

இமாம் - பிலால்:

இப்பள்ளிவாசலில், ராமநாதபுரம் மாவட்டம் - எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் ஹஸன், காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் இமாம்களாகவும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களான பிரபு இப்றாஹீம், முஹ்யித்தீன் தம்பி ஆகியோர் பிலால்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இரண்டு இமாம்கள், இரண்டு பிலால்கள் பணியாற்றும் - நகரின் ஒரே பள்ளியாகும் இது.

கஞ்சி & கந்தூரி கமிட்டி:

இப்பள்ளியில், நடப்பாண்டின் ரமழான் சிறப்பேற்பாடுகளைக் கவனிக்கும் கஞ்சி கமிட்டியினர் மற்றும் ரமழானையடுத்து - ஷவ்வால் மாதத்தில் இப்பள்ளியில் நடைபெறும் நான்கு வலிய்யுல்லாக்கள் கந்தூரி கமிட்டியினராக,

ஹாஜி வாவு முஹம்மத் உவைஸுல் கர்னைன் தலைவராகவும்,
ஹாஜி வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் செயலாளராகவும்,
எம்.ஏ.கே.அப்துல் ஹஸீப் பொருளாளராகவும்,

தை.சேகு முஹம்மத் என்ற அத்திக்கா ஹாஜி,
ஹாஜி ஏ.கே.ஷம்சுத்தீன்,
எம்.ஏ.கே.முஹம்மத் காஸிம்,
ஹாஜி எஸ்.ஏ.எஸ்.முஹம்மத் உமர் ஸாஹிப்,
எஸ்.டி.ஜாஃபர் ஸாதிக்
ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

ரமழான் மாதத்தில், வழமை போல நடப்பாண்டிலும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, மஹல்லாவாசிகளுக்கு வினியோகிக்கப்படுவதுடன், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியும் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

கஞ்சி செலவின விபரங்கள்:

கறி கஞ்சி - ரூ. 14,000
பிரியாணி கஞ்சி - ரூ.19,000
வெண்கஞ்சி - ரூ.11,000

என்ற நிர்ணயப்படி செலவழிக்கப்பட்டு வருகிறது. ரமழான் தராவீஹ் தொழுகைக்குப் பின் வழங்கப்படும் குடிப்பு, வித்ரிய்யா மஜ்லிஸ் நிறைவில் வழங்கப்படும் நேர்ச்சை உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் இதில் உள்ளடக்கம்.

கஞ்சி வினியோகம்:

நாள்தோறும் மாலையில் வினியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை, அப்பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த 130 முதல் 150 குடும்பத்தினர் வரை பெற்றுச் செல்கின்றனர். இது தவிர, பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் இல்லங்களுக்கும் நாள்தோறும் கஞ்சி அனுப்பி வைக்கப்படுகிறது.

இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:

நாள்தோறும் மாலையில் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை வகைகள் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.

படக்காட்சிகள் (கஞ்சி வினியோகம்):

15.07.2013 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற நோன்புக் கஞ்சி வினியோகத்தின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள் வருமாறு:-







படக்காட்சிகள் (இஃப்தார்):

17.07.2013 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள் வருமாறு:-











பழைய செய்தி:

இப்பள்ளியின் வரலாறு உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தகவல் உதவி:
ஹாஜி M.A.முஹம்மத் ஹஸன்

படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Zhe Cheng , Henan ) [03 August 2013]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 29175

அத்திக்கா ஹாஜி , ஹிஜாஸ் மைந்தன் வீட்டுக்கு கஞ்சி கொஞ்சம் கூடுதலா அனுப்பியிருப்பாங்க போல . மனுஷன் ஏகப்பட்ட போட்டோக்களை எடுத்து தள்ளியிருக்கிறார் . வடை வாடா படங்களை க்ளோஸ் அப் இல் எடுத்து வெளிநாட்டு காயலர்களை உசுப்பேத்துறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah) [03 August 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 29187

முஅத்தின் என்ற அழகான அரபி வார்த்தை இந்த காயல்.காம் ஆல் முற்றிலுமாக நம்ம ஊரை விட்டு அழிந்து விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது.... பாங்கு அழைப்பவரை பிலால் என்று மொட்டையாக அழைக்கும் பழக்கத்தை அறிமுகபடுத்திய பெருமை உங்களுக்கு தான். இதனால் பிலால் (ரலி) அவர்களை கண்ணிபடுதுகிறோம் என்று எண்ணினால் அது உங்கள் அறியாமையே!! அரபியும் அழிந்து காயலின் மோதியப்பா என்ற காயல் சொல்லும் அழித்த பெருமை உங்களுக்கே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved