குவைத் காயல் நல மன்றத் தலைவர் - அவரது இல்லத்தில் நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், அந்நாட்டிலுள்ள காயலர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்த செய்திக்குறிப்பு வருமாறு:-
பொதுவாக குவைத் நாட்டில் நமது காயலர்கள் மற்ற நாடுகளை போல் அதிகமான அளவில் இல்லை. குறைந்த அளவிலேயே உள்ளனர். ஆனாலும் அவர்களுக்குள் ஒருவர் மாற்றி ஒருவர், இந்த புனித நோன்பு மாதத்தை முன்னிற்று சக காயல் நண்பர்களை அழைத்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒன்றுகூடலை நடத்தி, விருந்து உபசரிப்பு நடத்தி வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது.
கடந்த வாரத்தில் குவைத் நகரில் மாலியா என்ற இடத்தில உள்ள காயலர்கள், தமது காயல் நண்பர்களை அழைத்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தியதை நிழற்படங்களுடன் இந்த இணையதளத்தில் மகிழ்ச்சியாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.
நமது குவைத் காயல் நல மன்றத்தின் தலைவர் மதிப்பிற்குரிய ஹசன் மௌலானா காக்கா அவர்கள் தனது குடும்பத்தோடு குவைத் நகரில் ஸால்மியா என்ற இடத்தில் உள்ளார்கள். தற்போது அவர்கள் தனது காயல் நண்பர்களை நேற்று வெள்ளி கிழமை அன்று நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்காக சால்மியாவில் உள்ள தனது இல்லத்திற்கு அழைத்து இருந்தார்கள்.
அதிகமான காயலர்கள் பெரும் மகிழ்ச்சியோடு நேற்று வெள்ளி கிழமை மாலை நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒன்றுகூடலில் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவர்களையும் ஹசன் மௌலானா காக்கா அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
காயலர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் இன்றி ஒருவர் ஒருவரை சந்தித்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைத்தனர்.
துபையில் இருந்து வந்து இருந்த எஸ்.எம்.டி.முஹம்மத் ஹஸன் அவர்கள் சிறப்பு விருந்தினராக இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
குவைத் நேரப்படி 6:40 மணி அளவில் நோன்பு திறப்பு நேரம், சுவையான ஈத்தபழம் மற்றும் தண்ணீருடன் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆரம்பமானது.
தொடர்ந்து சுவையான ப்ரூட் சாலட், கடற்பாசி மற்றும் ஜூஸ் வகைகள் மகிழ்ச்சியோடு பரிமாறபட்டது.
பின்பு மக்ரிப் தொழுகைக்காக அருகில் உள்ள பள்ளிக்கு சென்று இறையை வணங்கி நன்றி செலுத்திவிட்டு மீண்டும் ஒன்று கூடினர்.
அப்போது காயலர்களின் தனித்துவம் வாய்ந்த சுவையான வடை, கட்லெட் மற்றும் கறி கஞ்சி வகைகள் அன்போடு பரிமாறப்பட்டது.
இறுதியாக இஞ்சி டீ உடன் நோன்பு திறப்பு உபசரிப்பு நிகழ்ச்சி நிறையு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
வெகு நேரம் உரையாடி கொண்டு இருந்த நண்பர்கள் இஷா வேலை நெருங்கியதும் இறையை வணங்க கலைந்து சென்றனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கராபி அலி
படங்கள்:
Optic Aman Maricar |