தென்சீன நாட்டின் குவாங்ஸூ நகரில் நடைபெற்ற தராவீஹ் தொழுகையில் காயலர்களும் கலந்துகொண்டனர். இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
தென் சீனாவில் உள்ள குவாங்க்ஜோ நகரிலுள்ள ஸஹாபி அபீ வக்காஸ் பள்ளிவாசலில் இன்று இம்மாதம் 03ஆம் தேதி பின்னேரம் தராவீஹ் தொழுகை நடைபெற்றது.
லைலத்துல் கத்ர் இரவின் பலனை எதிர்பார்த்து, பெருந்திரளான சீனர்கள் மற்றும் பல்வேறு அரபு உலக மக்கள் மற்றும் வெளிநாட்டு முஸ்லிம்களும் ,மற்றும் நம் காயலர்கள் சிலரும் இந்த தொழுகையில் பங்குபெற்றனர்.
பெரும் கூட்டம் காரணமாக இரண்டு பிரிவாக தொழுகை நடைபெற்றது. முதலில் சீன முஸ்லிம்களும், அதன் பிறகு அரபு / வெளிநாட்டு முஸ்லிம்களும் என இரண்டு ஜமாத்துகளாக ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.
சிறப்புத் தொழுகைகள் அனைத்தும் இரவு 01.00 மணியளவில் நிறைவுற்றது.
காயலர் பிரபு அஹமத் ஜரூக் இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக நாளை ஊர் புறப்படுவதால், அவருக்கு ஹஜ் வழியனுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளின் விரிவான புகைப்பட தொகுப்பைக் காண இங்கே சொடுக்குக!
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. Re:...வாழ்த்துக்கள் அனைத்து இஸ்லாமியர்களும் posted byseyed ibrahim (yanbu, saudiarabiya)[05 August 2013] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29217
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)
4. maasaallah posted bysyedahmed (KPM)[05 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29218
I am very happy to seeing the photos taken in the abiwaqas mosque while tharaveeh prayer on this holy day of lailathul qathr. There is no strength of kayalties in Guanzhou, because of they went India for spending holidays during their vacations. Thank you for our Guangzhou kayal mandra thalaivar haji V.D. Sathack thambi took full effort to hold hands not only on this events but also when the religious fuctions happenings within stipulated time and date. May allah provide rewards for all on behalf of this holy ramalan and achieving good goals in life. ameen.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross