காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் இயங்கி வரும் நஸூஹிய்யா புனித குர்ஆன் ஹிஃப்ழு (மனன) மகளிர் மத்ரஸா நிர்வாகத்தின் சார்பில், மஹ்ழரா அரபிக் கல்லூரி வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 05) மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நகரின் அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினரும், நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறிகஞ்சி, சமோசா, மட்டன் கட்லெட், சிக்கன் 65, குளிர்பானம், அத்திப்பழ இனிப்பு, பனிக்கூழ், தேனீர் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
முன்னதாக, நஸூஹிய்யா மத்ரஸாவின் நிறுவனரான ஹாஜி ஏ.டபிள்யு.ஹிழ்று முஹம்மத் ஹல்லாஜ் - ஹாஜ்ஜா எம்.ஏ.சித்தி நிலோஃபர் தம்பதியின் நான்காவது குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சியும் மஹ்ழரா வளாகத்தில் நடைபெற்றது. குழந்தைக்கு, ஷெய்கு ஃபாத்திமா என்று பெயர் சூட்டப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், நஸூஹிய்யா மத்ரஸாவின் தலைவர் ஹாஜி ஏ.ஆர்.அப்துல் வதூத் தலைமையில், ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை உள்ளிட்டோரங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 03:43 / 06.08.2013] |