காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில், நின்ற நிலையில் உளூ செய்யும் வகையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த ஹவுள் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றுள்ளதையடுத்து, இன்று (ஆகஸ்ட் 05) இரவில் பயன்பாட்டுக்கு வந்தது.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, புதிய ஹவுள் பயன்பாட்டு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. துவக்கமாக துஆ இறைஞ்சப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ, ஹவுள் அறை வாசலைத் திறந்து வைத்து, துவக்கமாக உளூ (தொழுகைக்காக சுத்தம்) செய்தார்.
அவரைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மஹல்லாவாசிகள் அனைவரும் புதிய ஹவுள் தொட்டியில் உளூ செய்தனர்.
படங்களில் உதவி:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன் |