சீன நாட்டின் கூஸென் (GUZHEN) நகரிலுள்ள மஸ்ஜிதில், ரமழான் 27ஆம் நாளை முன்னிட்டு இம்மாதம் 04ஆம் தேதி நடைபெற்ற கியாமுல் லைல் சிறப்புத் தொழுகையில் காயலர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த விளக்கு செய்யித் முஹம்மத் அலீ, ஹாஜி எம்.என்.அப்துல் மாலிக் ஆகியோருடன், இளையாங்குடி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்களும் இணைந்து, அங்கு நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, தராவீஹ் தொழுகை மற்றும் கியாமுல் லைல் தொழுகை ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இப்பள்ளியில் நடைபெறும் வணக்க வழிபாடுகளில், சீனர்களும், அரபியர்களும் பெருமளவில் கலந்துகொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. |