தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து ஆசிஸ் குமார் IAS மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டம் துறையின் துணைச் செயலாளராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்டத்தின் 22வது ஆட்சியராக ஜூலை 28, 2011 அன்று பொறுப்பேற்ற இவர் - இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் இருந்துள்ளார். இவரைவிட இதற்கு முன்னர் 4 மாவட்ட ஆட்சியர்களே அதிக நாட்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தூத்துக்குடி மாவட்டத்தின் 23வது ஆட்சியராக - 56 வயது நிரம்பிய - எம்.ரவிகுமார் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணிப்புரிந்து வந்தார்.
1. Re:...வெண்ணை திறந்து வரும்போது தாளி udaindhathu posted bymackie noohuthambi (kayalpatnam)[07 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29252
ஆஷிஷ் குமார் நல்ல ஆட்சி தலைவர். காயல்பட்டினதுடன் நல்லதொரு நெருக்கமான தொடர்பு உள்ளவர். பல துறைகளிலும் இந்த மாவட்டத்தில் நற்பணியாற்றி மக்கள் உள்ளங்களில் நிறைந்து நின்றவர். எவ்வளவோ திட்டங்களுக்கு கால் கோள் விழா நடத்தி அவற்றின் ஆரம்ப நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். நாமும் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பொசுக் என்று சந்தடி இல்லாமல் ஒரு மாற்றம். என்ன அவசியம் இந்த அரசுக்கு ஏற்பட்டது என்று தெரியவில்லை.
இதனால்தான் நமதூரில் யாரும் IAS படிக்க விரும்புவதில்லை. இப்படி திடீர் மாற்றங்களால், நமது மன நிலை, உடல் நிலை, மக்களின் படிப்பு, மனைவியின் மனோ நிலை எல்லாம் பாதிக்கப்படும்.
குறைந்த பட்சம் ஒரு பதவியில் 5 வருடங்களாக நிலைத்து இருந்தால்தான் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற இயலும். ஒரு ஆட்சி நடக்க 5 வருடங்கள் அவகாசம் கொடுத்து நமது அரசியல் சட்டத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வழி செய்து இருப்பதுபோல் ஆட்சி தலைவரும் 5 வருடத்துக்கு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
புதிய ஆட்சி தலைவருடைய மனோ நிலையும் விடைபெற்று செல்லும் ஆட்சி தலைவருடைய மனோ நிலையும் அவரவர்களிடம் கேட்டால் தான் விளங்கும். தலை எழுத்து, என்ன செய்வது!
IAS படிக்கவும் வேண்டாம் இப்படி அவஸ்தை படவும் வேண்டாம். ஆளை விடுங்கள். எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே, நிம்மதி வேண்டும் வீட்டிலே, 60 வருடங்களுக்கு முன் நான் படிக்கும்போது கேட்ட பாடல் இப்போது காற்றலையில் மிதந்து வருகிறது.
2. மக்களின் வரிப்பணம் அரசுக்கு திரும்ப கிடைக்க வேண்டும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[07 August 2013] IP: 61.*.*.* India | Comment Reference Number: 29253
தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
புதிய ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கும் உயர் திரு எம்.ரவிகுமார் IAS அவர்களே உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் ஐயா...
மாண்புமிகு ஆட்சியர் ஐயா அவர்களே... ஒரு தாழ்மையான வேண்டுகோள் உங்கள் முன் வைக்கிறேன்... காயல்பட்டினம் நகராட்சியின் மேல் உங்களின் சிறப்பு கவன பார்வை இருக்கட்டும் ஐயா...!
3. Re:. பாராட்டுவோம்,வாழ்த்துவோம். .வரவேற்போம் நல்லபடி! posted byOMER ANAS (DOHA QATAR)[07 August 2013] IP: 37.*.*.* | Comment Reference Number: 29255
ஆசிஸ் குமார் அவர்கள், சிறந்த நற்குணம் கொண்டவர்., நம் மாவட்ட வளர்ச்சிக்கு வேண்டி அயராது உழைத்தார் ,மக்கள் குறை கேட்ப்பதில் மட்டுமல்லாது அவர்களின் குறை தீர்ப்பதிலும் வள்ளலாக திகழ்ந்தார்.துரிதம் காட்டினார்.செயல் வடிவம் கொடுத்தார்.
அவர் நமது ஊருக்கு வேண்டி செய்த நிறைய நற்காரியங்களை நினைவில் கொண்டு அவரை பாராட்டுவோம்.
அதே போல் எம்.ரவிக்குமார் அவர்களும் ஒரு சிறந்த ஆட்சியர் மட்டுமின்றி அரியலூர் மாவட்ட முன்னேற்றத்துக்கு வேண்டி அரும்பாடு பட்டவர்.
இவரின் சேவை தொடர நாம் வாழ்த்துவோம் வரவேற்ப்போம்.
ஐயா ,,
நீங்கள் ஆட்சிக்கு ஏறியதும் முதல் மக்கள் சேவையாக,
DCW எனும் கொடிய நச்சு ஆலைக்கு மூடு விழா தேதியை அறிவிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
செய்வீகளா..?
காத்திருக்கிறோம்....மக்கள்
கால காலமாய்..!
சகோதரா எங்கள் மக்களின் கனா பழிக்க .வந்த ...
கதா நாயகன் நீயாகக் கூட இருக்கலாம்...?
இன்ஷா அல்லாஹ்...!
4. ஆசிஸ் குமார் IAS மாற்றம், ஒரு ஏமாற்றமே. posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[07 August 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 29256
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் IAS மாற்றம், காயல் மக்களுக்கு ஒரு ஏமாற்றமே. மிகவும் எளிமையானவர். இலகுவில் தொடர்பு கொள்ள முடிந்தவர். நம் நகரோடு நெருங்கிய தொடர்புடைவர்.
அவர் நம்மை விட்டு எங்கு சென்றாலும் , அவர் பணி சிறக்க வாழ்த்துவோம்.
5. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[07 August 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29259
நம் மாவட்டத்திற்கு புதிதாய் ஆட்சியராக பதவி ஏற்ற உயர்திரு எம்.ரவிகுமார் IAS அவர்களை அன்புடன் வரவேற்று, உங்களின் பணிகள் நிம்மதியான, மன நிறைவான பணிகளாக சிறக்க வாழ்த்துகிறேன்.
உயர்திரு ஆசிஸ் குமார் IAS அவர்கள் மாற்றலாகி செல்லவதை அறிந்து மிகவும் வருத்தம்தான். சுறுசுறுப்பான மக்களின் நலன் மேல் மிகுந்த அக்கறை உள்ள ஆட்சியர். அரசாங்க பணி என்றால் நிம்மதியாக தூங்க முடியாது. நாளைய விடியல் நமக்கு இந்த ஊர்தானா என்ற நிச்சயம் இல்லாத வேலை.
முன்பும் இதே மாதிரி ஐயா பழனி ஆண்டி IAS , ஐயா மகேஸ்வரன் IAS ஆகியோர் மாற்றலாகி செல்லும் போதும் இதே வருத்தம் வந்து போனது. ஆக இது சகஜம்.
இது போல புதிய ஆட்சியர் எம்.ரவிகுமார் அவர்களும் மக்கள் மனதில் இடம் பிடிக்க பிராத்திக்கின்றோம்.
7. பிரியா விடை...பிரியமானவரே...! posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[07 August 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 29268
நமது மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் திரு எம்.ரவிக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!
மதிப்பிற்குரிய திரு ஆஷிஷ் குமர் அவர்கள் மாற்றலாகி செல்வது மனதை நெருடுகின்றது. சார் ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், எனது இரு கரம் கொண்டு ஓர் ஸல்யூட்! எங்கு எந்த பொறுப்பில் இருந்தாலும் உமது பணி சிறக்க வாழத்துக்கள்...! You are a real hero Mr.Ashish Kumar Sir.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross