காயல்பட்டினம் ஹிஜ்ரா கமிட்டி சார்பில், ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கடந்த ஜூலை 09 செவ்வாய்க்கிழமையன்று துவங்கிய ரமழான் மாதம் 29 நாட்களில் ஆகஸ்ட் 06ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 07ஆம் தேதி புதன்கிழமை பெருநாள் என்றும், அன்று காலை 07.00 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை நடைபெறுமென்றும் காயல்பட்டினம் நகர ஹிஜ்ரா கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்று காலை 07.00 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் தொழுகையை வழிநடத்தினார்.
ஏர்வாடியைச் சேர்ந்த மவ்லவீ அப்துர்ரஷீத் குத்பா பேருரையாற்றினார்.
நிகழ்வுகள் அனைத்திலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 31 ஆண்கள்; 22 பெண்கள் என மொத்தம் 53 பேரும், குழந்தைகளும் கலந்துகொண்டனர். குத்பா பேருரை நிறைவுற்றதையடுத்து, அவர்கள் தமக்கிடையில் கட்டித்தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
ஏற்பாடுகளை, ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் கிளை அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்களில் உதவி:
S.அப்துல் வாஹித்
ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் கிளை சார்பில் கடந்தாண்டு நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |