காயல்பட்டினம் கடைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், 6.08.2013 அன்று சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி - அப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகிக்க, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ துஆ இறைஞ்சினார்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல்பட்டினம் அரிமா சங்க நிர்வாகி ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ, ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் நகர ஜமாஅத்துகள் - பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு நேரம் வந்ததும் அனைவரும் நோன்பு துறந்தனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர் புட்டி, பிரியாணி கஞ்சி, வடை, மட்டன் பஃப்ஸ், வாழைப்பழம், குளிர்பானம், மட்டன் கட்லெட், பனிக்கூழ் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
எஞ்சிய உணவுப் பதார்த்தங்களை பொதுமக்கள் வீணாக்கி விடாதிருக்கும் நோக்குடன் - தேவைப்படுவோருக்கு கைப்பை வழங்கப்பட்டது. தாம் உண்டது போக எஞ்சிய உணவுப் பொருட்களை அவர்கள் அப்பையில் தமதில்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கடைப்பள்ளி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில், பரிமார் தெருவைச் சேர்ந்த ஜமாஅத் இளைஞர்கள் அங்கத்தினர் செய்திருந்தனர்.
கடைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 1:30pm / 11.08.2013] |