காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் ரமழான் 28ஆம் நாளான நேற்றிரவு (ஆகஸ்ட் 07), இஷா தொழுகை 22.00 மணிக்கும், தராவீஹ் தொழுகை 22.15 மணிக்கும் நடைபெற்றது.
23.30 மணியளவில் தஸ்பீஹ் தொழுகையும், அதனைத் தொடர்ந்து வித்ர் தொழுகையும் நடத்தப்பட்டது.
பின்னர், காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.நளீம் என்பவரின் மகன் ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் ஸாலிஹ் - நடப்பாண்டு ரமழான் மாதம் முழுவதும் நாள்தோறும் தராவீஹ் தொழுகையைப் பொறுப்பேற்று நடத்தியமைக்காக, அவருக்கு கண்ணியம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைவர் ஹாஜி நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து, பணமுடிப்பு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், ஹாஃபிழை வாழ்த்தி பணமுடிப்பு அளித்து ஊக்கப்படுத்தினர்.
பின்னர், ஹாங்காங் கம்பல்பக்ஷ் ட்ரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் வழமை போல இவ்வாண்டும், புனித ரமழான் மாதம் முழுக்க தராவீஹ் தொழுகையை வழிநடத்திய அனைவருக்கும் ஊக்கத்தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின்போது, பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ, பிலால் சதக் இப்றாஹீம் ஆகியோருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளை, பள்ளி இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் நெறிப்படுத்தினார். காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ சிறப்புரையாற்றினார்..
கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் வரவேற்றுப் பேசினார். ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம் அறிமுகவுரையாற்றினார். ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூறினார். ‘முத்துச்சுடர்’ மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆ இறைஞ்சி, நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
குருவித்துறைப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) ரமழான் தராவீஹ் தொழுகையை வழிநடத்திய இமாமுக்கு சங்கை செய்யப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |