காயல்பட்டினம் அப்பா பள்ளியில் வழமை போல நடப்பாண்டு ரமழான் மாதத்திலும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை வழிநடத்தினர்.
அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்று மாலை (அஸர் தொழுகைக்கு பின்) ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைவர் ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே. தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் முன்னிலை வகித்தார். ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
நடப்பாண்டு ரமழான் மாதம் முழுக்க நாள்தோறும் இரவுத் தொழுகையை வழிநடத்திய - காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவில் பயிலும்
(01) ஏ.எஸ்.சுவைலிம்
(02) ஆர்.அஹ்மத் பஷீர்
(03) எம்.ஏ.முஹம்மத் நூஹ்
(04) ஆர்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல்
(05) எஸ்.எச்.ஜியாஉல் அமீன்
(06) எம்.என்.அஸ்லாம்
(07) கே.ஃபாரூக் அப்துல்லாஹ்
(08) ஏ.எல்.ஸதக்கத்துல்லாஹ் மக்கீ
(09) எம்.என்.முஹாஜிர்
(10) உஸாமா
(11) எஸ்.நூஹ் நுஃபைஸ்
(12) எம்.ஏ.கே.நூஹ் ஸப்ரீ
(13) பி.ஹாரிஸ்
(14) எம்.யாஸிர்
(15) எம்.எஃப்.இப்றாஹீம்
(16) எஸ்.முஹம்மத் கிஸார்
(17) எஸ்.ஏ.என்.அஹ்மத் அம்மார்
(18) எஸ்.அனஸ் இஸ்மாஈல்
(19) எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா
(20) எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ
(21) எஸ்.எச்.ரோஷன்
(22) எஸ்.ஏ.கே.ஃபர்ஹான்
உள்ளிட்ட மாணவர்களுக்கு, அப்பாபள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் தம் கரங்களால் ஊக்கப்பரிசுகளை வழங்கினர்.
பள்ளியின் இமாம் ஹாஃபிழ் டி.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ் பக்ரீ சிறப்புப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில், அப்பாபள்ளி ஜமாஅத் பொதுமக்கள் கலந்துகொண்டு, தொழுகை நடத்திய மாணவர்களை வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
படங்களில் உதவி:
M.F.முஹம்மத் ஸாலிஹ்
அப்பா பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) ரமழான் இரவுத் தொழுகை நடத்தியோருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |