உலகின் எந்தப் பகுதியிலிருந்து தலைப்பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றாலும், அதனடிப்படையில் நோன்பு துவக்கம், பெருநாளை தீர்மானித்தல் என்று காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், இன்றிரவு (ஆகஸ்ட் 07 புதன்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், கேரள மாநிலம் காப்பாடு என்ற ஊரில் ஷவ்வால் தலைப்பிறை காணப்பட்ட தகவல் பெறப்பட்டுள்ளதால், இன்று நோன்புப் பெருநாள் இரவு என்றும், நாளை நோன்புப் பெருநாள் என்றும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் இன்றிரவு 08.45 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு. நாளை (ஆகஸ்ட் 08 வியாழக்கிழமை) காலை 07.30 மணிக்கு, காயல்பட்டினம் கடற்கரையில் நோன்புப் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நடைபெறுமெனவும், அனைவரும் கலந்துகொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ பெருநாள் அறிவிப்பை வெளியிட்டார். |