எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏழை மக்களுக்கான ஃபித்ரா உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி இம்மாதம் 07ஆம் தேதி புதன்கிழமை (நேற்று) இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ள தமுமுக அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டது.
அரிசி, சீனி, தேங்காய், மைதா மாவு, ஜவ்வரிசி, எண்ணெய், மேவா பொருட்கள் என ரூபாய் 127 மதிப்பிலான சமையல் பொருட்கள் அடங்கிய பொதி, 350 ஏழைப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
தமுமுக காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஜாஹிர் ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மனிதநேய மக்கள் கட்சியின் மாவ்டட துணைச் செயலாளர் ‘முர்ஷித்’ முஹ்ஸின், அதன் நகர செயலாளர் ஐதுரூஸ், தமுமுக மருத்துவ அணி நகர செயலாளர் முஜீப், நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினரான ஷாஹுல் ஹமீத், ஹஸன், காதர், அஹ்மத் ஹுஸைன், முஸ்தஃபா, ‘குட்டீஸ்’ இப்றாஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமுமுக காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நடத்தப்பட்ட ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகம் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |