இன்று (ஆகஸ்ட் 08) நோன்புப் பெருநாள் என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகத்தின் சார்பில், இன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் பெருநாள் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் (முர்ஷித்), பொறியாளர் எம்.ஐ.அப்துல்லாஹ் மரைக்கார், ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., கரூர் ட்ரேடர்ஸ் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், ஹாஜி எம்.என்.எம்.ஐ.மக்கீ, ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.அப்துல் ஜப்பார், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எழுத்தாளர்களான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், சாளை முஹம்மத் முஹ்யித்தீன், சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) தலைவர் எம்.ஏ.புகாரீ (48), விஸ்டம் பப்ளிக் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இத்தொழுகையின்போது, ஏழைகள் துயர் துடைக்கும் ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளைக்காக
ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 78,395 தொகையும்,
பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 58,375 தொகையும் என
மொத்தம் ரூபாய் 1,36,770 தொகை நிதியும், 3 தங்க மோதிரங்களும், ஒரு வெள்ளிக் கொலுசும் பொதுமக்கள் நன்கொடையாகப் பெறப்பட்டது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
படங்களில் உதவி:
S.I.ஹைதர் அலீ
தகவல் உதவி:
M.A.புகாரீ (48)
ஐ.ஐ.எம். சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |