நடப்பாண்டு ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளைத் தீர்மானிப்பதற்கான ஜாவியா - மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக் கூட்டம், இன்றிரவு (ஆகஸ்ட் 08) மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி வளாகத்தில், மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது.
காயல்பட்டினத்திலேயே பலர் பிறையை தெளிவாகப் பார்த்த தகவல்கள் பெறப்பட்டு, அது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில், இன்று பெருநாள் இரவு என்றும், நாளை - ஆகஸ்ட் 09ஆம் தேதி வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் என்றும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இரவு 07.10 மணியளவில் இவ்வறிவிப்பை - மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ முறைப்படி அறிவித்தார்.
கூட்டத்தில், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் உலமாக்களும் (மார்க்க அறிஞர்கள்), நகர உலமாக்களும் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1433) மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட நோன்புப் பெருநாள் அறிவிப்பு குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |