சீன நாட்டில் நடப்பு ரமழான் மாதத்தில் 30 நோன்புகளும் பூர்த்தி செய்யப்பட்டதையடுத்து, இன்று (ஆகஸ்ட் 08ஆம் தேதி வியாழக்கிழமை) நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாள் தொழுகையில் காயலர்களும் கலந்துகொண்டனர்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு வருமாறு:-
தெற்கு சீனாவில், அபீ வக்காஸ் என்ற நபித்தோழர் அடக்கஸ்தலம் அமைந்துள்ள பள்ளிவாசலில், இன்று காலை 09.00 மணியளவில் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
சீனர்கள், அரபிய்யர்கள் உள்ளிட்ட பன்னாட்டு முஸ்லிம்கள் சுமார் 10 ஆயிரம் பேர் இத்தொழுகையில் பங்கேற்றனர்.
காயல்பட்டினம், கூத்தாநல்லூர், ஏர்வாடி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்களும் இத்தொழுகையில் கலந்துகொண்டனர்.
தொழுகைகள் நிறைவுற்றதும், அனைவரும் வசிப்பிடம் திரும்பினர். எங்கு நோக்கினும் முஸ்லிம் மக்கள், தொப்பியணிந்த சீனர்களின் தலைகள், அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலும் கூட சாரி சாரியாக முஸ்லிம்கள் என - கம்யூனிஸ நாடான சீனாவில் தென்பட்ட இக்காட்சி அரிதான ஒன்றாகும்.
படக்காட்சிகளை தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாஜி V.D.சதக்கு தம்பி |