இன்று நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை, காலை 07.30 மணியளவில் நடத்தப்பட்டது. ஏ.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, “நோன்பின் படிப்பினைகள்” எனும் தலைப்பில், ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ உரையாற்றினார்.
நிகழ்வுகள் அனைத்திலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட - நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஹாஜி தாஹா, ஹாஜி எஸ்.எம்.மூஸா, மரைக்கார் ஆலிம், ஹாஜி எல்.எஸ்.அன்வர், டாக்டர் அபுல்ஹஸன் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
தொழுகை நிறைவுற்ற பின்னர், ஏழைகள் துயர்துடைக்கும் நலநிதிக்காக ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 33 ஆயிரத்து 565 தொகையும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 41 ஆயிரத்து 815 தொகையும் என மொத்தம் 75 ஆயிரத்து 380 ரூபாய் தொகையும், தங்க மோதிரம் ஒன்றும் நன்கொடையாகப் பெறப்பட்டது.
தகவல்:
S.ஷம்சுத்தீன்
தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை
[கூடுதல் தகவல், படங்கள் இணைக்கப்பட்டன @ 15:04 / 09.08.2013]
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |