குவைத் நாட்டில் ஆகஸ்ட் 08ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அங்குள்ள காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்திக்குறிப்பு:-
குவைத் நகரில் 28ஆம் நோன்பு திறந்த உடன் அந்த இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது, ஏனெனில், அந்த இரவே பெருநாள் இரவாக அமையுமோ என்று பெரும் வருத்ததுடன் அனைவரும் காணப்பட்டனர். குவைத் மற்றும் சஊதியில் இருந்து வந்த செய்திகள் எல்லாம் - நாம் நோன்பு பிடித்தது ஒருநாள் தாமதம் என்றும் இன்று 29 முடிந்து இன்று இரவே பெருநாள் என்றும் பரவலாக செய்திகள் பரவ ஆரம்பித்தது.
28 நோன்புகளோடு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒரு நோன்பு "கழா" செய்து பெருநாள் முடிந்த உடன் பிடித்து கொள்ள வேண்டும் என்று டிவி மற்றும் பத்திரிகைகள் முலமும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. எனவே, 28ஆம் நோன்பு திறந்து விட்டு பெரும் கவலையோடு நமது காயலர்களும் சரியான தகவலுக்காக காத்து இருந்தனர்.
அல்லாஹ்வின் பேரருளால், இரவு சுமார் 08.00 மணி அளவில் இஷா தொழுகைக்கு முன்பாகவே, “இன்று நோன்புதான்! பெருநாள் இல்லை!!” என்று செய்தி குவைத் மற்றும் சஊதியில் இருந்து வந்தது.
நமது காயலர்கள் மட்டுமின்றி அனைவருமே பெரும் மகிழ்ச்சியோடு இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்காக விரைந்தனர்.
குவைதில் வாழும் காயலர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி என்னவெனில், மராமத்து பணிகள் செய்து கொண்டு இருந்த காரணத்தினால் கடந்த ஆண்டு தராவீஹ் தொழுகை நடைபெறாமல் இருந்த குவைத் பெரிய பள்ளியான - மஸ்ஜிதுல் கபீரில், இவ்வாண்டு மிகப்பிரமாண்டமாக, அழகிய வடிவமைப்புகளுடன் கட்டி முடித்து, திறந்து இருப்பதுதான்.
இந்த பள்ளியை, உள்பள்ளி மற்றும் வெளி பள்ளி என்று பெரிய அழகிய வடிவமைப்புடன் கட்டி முடித்திருக்கிறார்கள்.
பார்ப்பதற்கு பிரமாண்டமாக உள்ள இந்த பள்ளியில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தொழும் வசதியுடன் அமைந்துள்ளது. தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுகையின்போது பள்ளி மக்கள் திரளால் நிரம்பி வழிகிறது. நமது காயலர்களும் இந்தப் பள்ளிக்கு சென்று இறையை வணங்கி மகிழ்கின்றனர்.
மேலும் குவைதில் அதிகமான காயலர்கள் இருக்கக்கூடிய மாலியாவில் உள்ள முத்தண்ணா காம்ப்ளெக்ஸ் அருகில் பழமை வாய்ந்த ஒரு பள்ளி உள்ளது. அதில் 80 வயதுக்கும் மேலான சிரியா நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவர் (நம்மூர் பாஷையில் “அப்பா”) இமாமாக உள்ளார்கள், அவர்கள் சுறுசுறுப்புடன் தராவிஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுக வைப்பதைப் பார்பதற்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். நமது காயலர்கள் இந்தப் பள்ளியிலும் தராவிஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுது இறையை வணங்கி மகிழ்கின்றனர். அன்பாக இந்த பள்ளியை “அப்பா பள்ளி” என்று அழைக்கின்றனர்.
மற்ற பகுதியில் உள்ள நமது காயலர்கள் ஆங்கங்கே உள்ள பள்ளிகளில் தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுது இந்த புனித நோன்பை சிறப்பாக நிறைவுபடுத்தினார்கள்.
புதன்கிழமை நோன்பு 29 முடிவில் சுமார் 07.00 மணியளவில், ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பெருநாள் என்று அறிவிக்கப்பட்டது.
அது முதல் நமது காயலர்களிடம் பெருநாள் கொண்டாட்டம் களை கட்டியது. வியாழன் காலை 06:30 மணி அளவில், ஷர்க் எனும் இடத்தில் உள்ள "மஸ்ஜிதுல் முதவ்வா''வில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் நமது காயலர்களில் பெரும்பாலோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். தொழுகையைத் தொடர்ந்து தமிழ் பயான் நடைபெற்றது.
அனைத்து நிகழ்வுகளும் நிறைவுற்ற பின்னர், காயலர்கள் ஒன்றுகூடி, ஒருவரையொருவர் கட்டித் தழுவி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர், அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி பெருநாள் காலை உணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது. சுவையான கறி, பரோட்டா, கோலியாப்பம், இடியாப்பம், ஜவ்வரிசி, வட்டிலியாப்பம் ஆகியன அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மதிய உணவாக சுவையான நெய்ச்சோறு, கறி, கத்திரிக்காய் - மாங்காய் பருப்பு, சிக்கன் 65 ஆகியன சூடாகவும், சுவை - மணத்துடனும் பரிமாறப்பட்டன.
இவ்வாறு, குவைத் காயலர்கள் மூலம் பெறப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
Al-ghanim MT Abul Hassan
Exchange MKT Mohideen Ibrahim Sahib
படங்கள்:
Heisco Mohideen Thamby
KOC Buhary |