நோன்புப் பெருநாளை முன்னிட்டு, வெளியூர்களிலும் - வெளிநாடுகளிலும் பணிபுரியும் காயலர்கள் கூட்டங்கூட்டமாக சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
ஊரின் வழமையான மக்கள் இருப்பை விட தற்போது எண்ணிக்கை வழமைக்கு மாற்றமாக பெருமளவில் அதிகரித்துள்ளதையடுத்து, இன்று ஜும்ஆ தொழுகையின்போது நகரில் ஜும்ஆ பள்ளிகள் நிறைந்து காணப்பட்டது.
பெருநாள் மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் வெளி வளாகத்தில் சாமியானா பந்தல் நிறுவப்பட்டிருந்தது.
பள்ளியின் தரை தளம், மேல் தளம், வெளிப்பள்ளி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நிறைந்து இட நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, பள்ளியையொட்டி சாலையிலும் 6 வரிசைகளில் பொதுமக்கள் நின்று தொழுதனர்.
|