மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கல்கத்தாவில் இம்மாதம் 09ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அங்குள்ள 5ஆம் எண் ஜகரிய்யா தெருவில் நடைபெற்ற பெருநாள் தொழுகை நடத்தப்பட்டு, குத்பா பேருரை நிகழ்த்தப்பட்டது.
காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப் தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், காயலர்கள், கீழக்கரையினர் மற்றும் மேலப்பாளையத்தைச் சார்ந்தவர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
கல்கத்தாவிலுள்ள 5ஆம் எண் ஜகரிய்யா தெருவில், 1972ஆம் ஆண்டில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹூம் கைலானி அப்பா, மர்ஹூம் குளம் மகுதூம் ஹாஜி, ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, கீழக்கரையைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி யாஸீன் காக்கா ஆகியோரால் துவக்கப்பட்டு, இன்றளவும் ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க தராவீஹ் தொழுகையும், இரு பெருநாட்களிலும் பெருநாள் தொழுகையும் நடத்தப்பட்டு வருகிறது.
துவக்க ஆண்டில் மர்ஹூம் ஹாஃபிழ் தர்வேஷ் அவர்களால் தொழுகை வழிநடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
கல்கத்தாவிலிருந்து...
K.Z.முஹ்யித்தீன் அப்துல் காதிர் |