சவுதி அரேபியா,ஜித்தா நகரில் இம்மாதம் 08-ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் – நோன்புப்பெருநாள் கொண்டாடப்பட்டது.
அங்கு ஷரபிய்யாவில் உள்ள மஸ்ஜிதுன் சுன்னா ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை இனிதே நிறைவு செய்துவிட்டு, தொழுகை நிறைவுற்ற பின்னர் காயலர்கள் சந்தித்து கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
அடுத்த நாள் சனியன்று மாலையில் அங்குள்ள செங்கடல் கரையோரம் சென்றும் பின்னர் படகு சவாரி உல்லாசமாக செய்தும் கொண்டார்கள்.
மேலும் அவரவர் இல்லம் சென்றும் சந்தித்து பெர்ருநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்ட காட்சிகளின் தொகுப்பு :-
உலகின் பல பாகங்களில் உள்ள அனைத்து காயல் சொந்தங்கள்,உறவுகள்,நட்புகள் அனைவருக்கும் ஜித்தா வாழ் காயலர்களின் இதயம்கனிந்த ஈகைத்திருநாள் நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களுடன் இனிய அஸ்ஸலாமு அலைக்கும்.
தகவல் & படங்கள்:
ஜட்னி,எஸ்.எ.கே.செய்யது மீரான்.
ஜட்னி,எஸ்.எ.கே.முஹம்மது உமர் ஒலி.
ஜித்தா - சவுதி அரேபியா
|