தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நலிந்தோருக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.
அரிசி, சீனி, நெய், மல்லி, மஞ்சள், வத்தல் பொடி, மைதா, ஜவ்வரிசி, கிஸ்மிஸ், அண்டி பருப்பு, சேமியா, இறைச்சி வாங்குவதற்காக ரூபாய் 50 தொகை ஆகியன ஒவ்வொரு உணவுப் பொருள் பொட்டலத்திலும் உள்ளடக்கம்.
ஃபித்ரா வகைக்காக உள்ளூரிலிருந்து சேகரிக்கப்பட்ட தொகை ரூபாய் 89 ஆயிரத்து 800 மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையிலிருந்து பெறப்பட்ட தொகை ரூபாய் 15 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 800 தொகையைக் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலுள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த 475 ஏழை மக்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
S.ஷம்சுத்தீன்
தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
காயல்பட்டினம் நகர கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கடந்த ஹிஜ்ரீ 1432 ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகம் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |