தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில், ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம் தொகையைக் கொண்டு, நலத்திட்ட உதவிகளுக்காக ஜகாத் நிதி வினியோகிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 08ஆம் தேதி மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள ஜாமிஉத் தவ்ஹீத் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) பள்ளியில் இதற்கென சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஏ.அப்துல் மஜீத் உமரீ, “ஜகாத் நடைமுறை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம் தொகையில், மருத்துவம் - கல்வி - வாழ்வாதார தேவைகளுக்காக ஏழை - எளிய மக்கள் 42 பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
உதவித்தொகைக்கான கோரிக்கைகள் அதிகளவில் உள்ளதால், பொதுமக்கள் தமது ஜகாத் நிதிகளை
பொருளாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை
முகவரி: ஜாமிஉத் தவ்ஹீத்
233. அலியார் தெரு. காயல்பட்டிணம்.
தொடர்பு எண்: +91 4639 283567
என்ற தொடர்பு விபரப்படி வழங்கி ஒத்துழைக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு நிகழ்ச்சியின்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இதுவரை சுமார் ரூபாய் 10 லட்சம் வரை - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களின் நலத்திட்ட உதவிகளுக்காக ஜகாத் நிதி வினியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
S.ஷம்சுத்தீன்
தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
காயல்பட்டினம் நகர கிளை |