ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் 08ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் தலைநகர் அபூதபீயிலுள்ள Grand Mosque என்றழைக்கப்படும் பெரிய பள்ளியில், அன்று காலை 06.30 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
அனைத்தும் நிறைவுற்ற பின்னர், காயலர் ஒன்றுகூடல் நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப் பின் அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்ததால், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, கைலாகு செய்து, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
அபூதபீயிலிருந்து...
நோனா K.அபூ ஹுரைரா |