சஊதி அரபிய்யாவில் இம்மாதம் 08ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் – நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
இப்பெருநாளை புனித மதீனா நகரில் கொண்டாடும் நோக்குடன், ரியாத் - தம்மாம் - யான்பு காயலர்கள் இணைந்து, மதீனா புறப்பட்டுச் சென்றனர்.
மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய அவர்கள், பின்னர் ஒன்றுகூடி, கட்டித்தழுவி - கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர், மதீனாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்ற அவர்கள், அங்குள்ள வரலாற்றுப் பதிவுகளைப் பார்வையிட்டு நினைவுகூர்ந்தனர்.
இவ்வாறாக அவர்களது பெருநாள் கொண்டாட்டம் அமைந்திருந்தது.
தகவல் & படங்கள்:
ஹாஜி A.தர்வேஷ் முஹம்மத்
மூலமாக
முஹம்மத் லெப்பை
ரியாத் - சஊதி அரபிய்யா |